[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
  • BREAKING-NEWS ஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா
  • BREAKING-NEWS தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி

வாரத்தில் ஒருநாள் கைத்தறி ஆடை உடுத்துங்கள்: எடப்பாடி பழனிசாமி

wear-handloom-dress-weekly-a-day-cm-palanisamy-request

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பிரிவு மக்களும் வாரத்திற்கு ஒருநாள் கைத்தறி ஆடைகளை உடுத்தி கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு ஆதரவு அளிக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

தேசிய கைத்தறி தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கைத்தறி தொழில் வளர்ச்சிக்காக பேரறிஞர் அண்ணா தனது தோளிலும், தலையிலும் சுமந்து கைத்தறி ஆடைகளை விற்று நெசவாளர்களுக்கு வாழ்வளித்ததாக தெரிவித்துள்ளார். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது நெசவாளர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

அனைத்து பிரிவு மக்களும் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் விற்பனை நிலையங்கள், கோ-ஆப்டெக்ஸ் மற்றும் லூம்வேர்ல்ட் விற்பனை நிலையங்களில் விற்கப்படும் பட்டு மற்றும் கைத்தறி ஆடைகளை வாங்கி, வாரத்திற்கு ஒரு நாள் வெள்ளிக்கிழமை அல்லது திங்கட்கிழமை உடுத்தி, கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கு ஆதரவு அளிக்குமாறு முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close