[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்கக்கோரி தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் திமுகவினர் புகார் மனு
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்த சதி நடைபெறுகிறது: திருமாவளவன்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் மக்கள் டிடிவி தினகரனை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாகையில் போராட்டம் நடத்த வந்த ஹெச்.ராஜாவை வஞ்சியூரில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்
  • BREAKING-NEWS பணப்பட்டுவாடா செய்தால் தேர்தலை ரத்து செய்வது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: திருமாவளவன்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டையில் உள்ள பிசியோதெரபி கிளினிக்கில் கணக்கில் வராத ரூ.13 லட்சம் பறிமுதல்
  • BREAKING-NEWS இருண்டு கிடக்கும் தமிழகத்திற்கு இடைத்தேர்தல் முடிவு வெளிச்சத்தை பாய்ச்சட்டும்- ஸ்டாலின்
  • BREAKING-NEWS வரும் 19 ஆம் தேதி கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரத்திற்கு பிரதமர் வர உள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆபத்தான நிலையில் தான் ஜெயலலிதாவை அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்- பிரதாப் ரெட்டி
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சியின் தலைவராக முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார் ராகுல் காந்தி
  • BREAKING-NEWS ஆளுநரின் ஆய்வு அவரது அதிகாரத்துக்கு உட்பட்டது
  • BREAKING-NEWS தூத்துக்குடி அருகே கடலில் நாட்டுப்படகு பழுதாகி மூழ்கியதில் மீனவர் கென்னடி உயிரிழப்பு
  • BREAKING-NEWS நீர்மட்டம் குறைந்ததால் வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது
  • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீராகாததால் 16வது நாளாக குளிக்க தடை விதிப்பு
அரசியல் 05 Aug, 2017 08:22 PM

டிடிவி தினகரன் கட்சியில் இல்லாதவர்: ஓபிஎஸ் அணியின் கேபி முனுசாமி கருத்து

ttv-dinakaran-is-not-in-admk-said-kp-munusamy

டிடிவி தினகரன் அம்மா அணியில் இருப்பதாக சொல்லிக் கொள்கிறார், எங்களைப் பொருத்தவரையில் டிடிவி தினகரன் கட்சியில் இல்லாதவர். ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர் டிடிவி என்று கேபி முனுசாமி கூறியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்றைய அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு, எப்படி செயல்படவேண்டும் என்பது குறித்து கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்தோம். தமிழகத்தில் நிலவும் பல்வேறு சிக்கல்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்றும், டெங்கு பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்க அடிப்படை  வசதிகளை செய்யக் கோரியும் ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளோம். ஆர்ப்பாட்டம் செய்ய முறையான அனுமதி வாங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. மக்கள் பிரச்னைக்காக போராட்டம் செய்வதை திமுக கேலிக்கூத்து என்று விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது. அப்படியென்றால் திமுகவின் போராட்டங்களும் கேலிக்கூத்துகள்தான். 

டிடிவி தினகரன் நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளதில் எங்களுக்கு ஒரு குழப்பமும் இல்லை. அவர் அதிமுக அம்மா அணியில் இருப்பதாக சொல்லிக் கொள்கிறார். எங்களைப் பொறுத்தவரை அவர் கட்சியில் இல்லை. ஜெயலலிதாவால் அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர். அவர் குறித்து என்னிடம் கேட்க வேண்டாம்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்காக ராஜினாமா செய்ய வேண்டும். இளைஞராக உள்ள அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. குற்றமற்றவர் என்று அவர் நிரூபித்தால், அது கட்சிக்கும் நல்லது, அவருக்கும் நல்லது என்று கூறினார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close