[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை

திமுக கூட்டணிக்கு தேமுதிக வரும் என்ற நம்பிக்கையை இழக்கவில்லை: கருணாநிதி பேட்டி

dmdk-will-come-for-dmk-alliance-karunanidhi-hope

திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்க‌ள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர்கள் 65 பேர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுகவிற்கு செல்வாக்கு உள்ள தொகுதிகள் குறித்து மாவட்டச் செயலாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

அதேவேளையில், தேர்தல் பரப்புரையின் போது எதிர்கட்சிகளை கையாள்வது குறித்தும் கூட்டத்தில் வியூகம் வகுக்கப்பட்டது.

சென்னையில் திமுக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தியபின் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி, திமுக கூட்டணிக்கு தேமுதிக வரும் என்ற நம்பிக்கையை தாம் இழக்கவில்லை என தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close