[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து மே 28ஆம் தேதி தேமுதிக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் இணையதள சேவையை சீரமைப்பது குறித்து நாளைக்குள் ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை
  • BREAKING-NEWS நெல்லையில் முடக்கப்பட்டிருந்த இணையதள சேவை சீரானது
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தரவு - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்
  • BREAKING-NEWS சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
  • BREAKING-NEWS நெல்லை , கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம் ரத்து - தமிழக அரசு
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி பெற்றார்

’அதிமுக தலைமைக்கழகம் எங்கள் சொத்து’: டிடிவி தினகரன்

aiadmk-leadership-is-our-property-ttv-dinakaran

அதிமுக தலைமைக்கழகம் எங்கள் வீடு போன்றது எப்போது வேண்டுமானாலும் செல்வேன் என அதிமுக அம்மா அணியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் தனது அணிக்கு இன்று புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார். மேலும் தமிழகம் முழுவதும் டிடிவி தினகரன் சுற்றுப்பயணத்தையும் அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள தனது இல்லத்தில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இரு அணிகளும் இணைய கொடுத்த கெடு முடிவடைவதால் எப்போது அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல உள்ளீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர்,  ’அதிமுக தலைமைக்கழகம் எங்கள் சொத்து. அதிமுக தலைமை அலுவலகம் எங்கள் வீடு போன்றது. எங்களுக்கு கோவில்போன்றது. ஆகையால் எப்போது வேண்டுமானாலும் தலைமைக் கழகத்திற்கு செல்வேன்' என்று தெரிவித்தார். 
'நான் தலைமைக் கழகத்திற்கு செல்வதை தடுக்க எந்த காவல்துறைக்கும் அதிகாரமில்லை. எந்த சட்டத்திலும் அதற்கு இடமில்லை. எதிரிகளால் தலைமைக் கழகத்திற்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதற்காகவே தலைமைக் கழகத்தில் போலீஸ் குவிக்கப்பட்டிருக்கலாம். சட்டத்திற்கு புறம்பாக காவல்துறையினர் செயல்பட மாட்டார்கள்' என்றும் தினகரன் கூறினார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close