[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
  • BREAKING-NEWS ஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சம்- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா
  • BREAKING-NEWS தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை யாராலும் வீழ்த்த முடியாது - தம்பிதுரை எம்.பி

இணைகிறதா அணி? நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ் திடீர் அழைப்பு

ops-invite-his-party-leaders

அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்க சென்னைக்கு வருமாறு தனது அணியின் மாவட்ட நிர்வாகிகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார். 

அதிமுக, அம்மா அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான புரட்சித்தலைவி அம்மா அணியும் இணைவதற்கு டிடிவி தினகரன் 60 நாட்கள் கால அவகாசம் வழங்கியிருந்தார். அந்த காலக்கெடு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், இரு அணிகளும் இணைவதற்கான எவ்வித சாத்தியக்கூறுகளும் தென்படவில்லை. இதனால் அவர் அடுத்தக்கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்ற கேள்வி எழத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தனது அணியின் மாவட்ட நிர்வாகிகள், நாளை சென்னை வரவேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார். அணிகள் இணைப்பு, தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close