[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மருத்துவப் படிப்பு- தரவரிசைப் பட்டியல் வெளியீடு
  • BREAKING-NEWS நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி ஆளுநருக்கு காங். எம்எல்ஏக்கள் கடிதம்
  • BREAKING-NEWS மருத்துவ மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
  • BREAKING-NEWS நீட் விவகாரத்தில் தமிழக மாணவர்கள் மீது மத்திய அரசுக்கு அக்கறை இல்லை: ஜி.கே.வாசன்
  • BREAKING-NEWS முதன்முறையாக யானைகளுக்கான ஹைட்ராலிக் விலங்குகள் ஆம்புலன்ஸ்
  • BREAKING-NEWS கருத்து வேறுபாடுகள் இல்லாமல் முதலமைச்சர் பழனிசாமியின் ஆட்சி நடைபெற்று வருகிறது: தம்பிதுரை
  • BREAKING-NEWS ஹாங்காங்கை ஹாட்டோ எனும் கடும் புயல் தாக்கியது
  • BREAKING-NEWS பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.71.22 , டீசல் விலை லிட்டருக்கு ரூ.60.05
  • BREAKING-NEWS சென்னையில் செப்.5 இல் நடைபெறும் முரசொலி பவள விழாவில் பங்கேற்கிறேன்: வைகோ
  • BREAKING-NEWS சென்னையில் செப்.5 இல் நடைபெறும் முரசொலி பவள விழாவில் வைகோ பங்கேற்க உள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கச் சென்றார் வைகோ
  • BREAKING-NEWS திருவள்ளூர்: எண்ணூர், சின்னகுப்பம், பெரியகுப்பம் பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படுகிறது
  • BREAKING-NEWS நீட் துரோகத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: ஸ்டாலின்
அரசியல் 03 Aug, 2017 06:44 PM

விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும்: மு.க.ஸ்டாலின்

vijayabaskar-should-resign-mk-stalin

காதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்கள் முடக்கப்பட்டு, பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கியுள்ளதாக புகார் எழுந்த நிலையில், இப்போதாவது அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு ஆளும் கட்சியான அதிமுக சார்பில் பணம் வழங்கப்படுவதாக புகார் வந்ததால் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தியது. இதனையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, சென்னை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், நாமக்கல் ஆகிய இடங்களில் உள்ள அவரது உறவினர்கள் வீடு, தொழில் நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான திருவேங்கைவாசலில் உள்ள கல்குவாரி, புதுக்கோட்டையில் உள்ள அவரது 100 ஏக்கர் விவசாய நிலம் ஆகியவை வருமான வரித்துறையால் முடக்கப்பட்டது. மேலும் அமைச்சர் விஜயபாஸ்கர், தனது சமையல்காரர் பெயரில் தொழில் பரிவர்தனைகளை மேற்கொண்டதாகவும் புகார் கூறப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், " விஜயபாஸ்கரின் நிலங்கள், சொத்துகள், உடமைகள் முடக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகிறது. பினாமி பெயரில் சொத்துகள் வாங்கி வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கு பிறகும் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்யாமல் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. எனவே விஜயபாஸ்கர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்" என தெரிவித்தார்.
 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close