[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மதுரையில் இன்று அதிகாலை காய்ச்சலுக்கு கிருஷ்ணராஜ்(10) என்ற சிறுவன் உயிரிழப்பு
  • BREAKING-NEWS திருப்பதி அடுத்த மங்கலம் வனப்பகுதியில் செம்மரம் வெட்டச் சென்றதாக தி.மலை சேர்ந்த இருவர் கைது
  • BREAKING-NEWS பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஷிங்கர் திரையரங்கம் அருகே உள்ள கட்டடத்தில் பெரும் தீ விபத்து
  • BREAKING-NEWS இணையதளத்தில் திருட்டுத்தனமாக படங்களை யாரும் பார்க்க வேண்டாம்; திரையரங்கில் பார்க்க வேண்டும் - விஷால்
  • BREAKING-NEWS நெல்லை ஆட்சியர் அலுவலகம் எதிரே தீக்குளித்து படிகாயமடைந்த இசக்கிமுத்துவை சந்தித்து ஆறுதல் கூறினார் திருமாவளவன்
  • BREAKING-NEWS பகுத்தறிவு என்று கூறி தமிழகத்தில் அடிப்படை அறிவை மழுங்கடித்துவிட்டார்கள்: ஹெச். ராஜா
  • BREAKING-NEWS பொருளாதார பிரச்னை குறித்து பேசுவோரை மதரீதியில் அடையாளப்படுத்துவது மோசமானது: கனிமொழி எம்.பி
  • BREAKING-NEWS சென்னையில் பாரதிய ஜனதா தேசிய செயலாளர் ஹெச். ராஜா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்ன விவகார வழக்கில் விசாரணையை அக்.30ம் தேதிக்கு ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS விஷால் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நடத்தவில்லை: ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு விளக்கம்
  • BREAKING-NEWS நடிகர் விஜயின் கோபத்தின் வெளிப்பாடே மெர்சல் படம்: எஸ்.ஏ.சந்திரசேகர்
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் எங்கள் தரப்புக்கே கிடைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் 4 பேர் தீக்குளித்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை தேவை: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் இன்று முடிவெடுக்கப்பட வாய்ப்பில்லை: டிடிவி தினகரன்
அரசியல் 01 Aug, 2017 05:42 PM

கமலும், ரஜினியும் முதலில் அரசியலுக்கு வரட்டும்: திருநாவுக்கரசர்

kamal-and-rajini-first-come-to-politics-thirunavu-karasar

காங்கிரஸில் இணைய நடிகர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக வெளியான செய்தியை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் மறுத்துள்ளார். இது தொடர்பாக புதியதலைமுறைக்கு பேட்டியளித்த அவர், நடிகர்கள் ரஜினியும், கமலும் முதலில் அரசியலுக்கு வரட்டும் என தெரிவித்தார்.

ஜெயலலிதா மறைவிற்கு பின் தமிழக அரசையும், அமைச்சர்களையும் தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன். இதனால் அவர் விரைவில் அரசியலுக்கு வரலாம் என்ற பேச்சு விவாதப் பொருளாக தமிழகத்தில் தலைதூக்கி விட்டது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் காங்கிரஸில் இணைய அக்கட்சியில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், காங்கிரசில் இணைய கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட செய்தியை மறுத்தார். "நடிகர் ரஜினியோ கமல்ஹாசனோ எந்தக் கட்சியிலும் இணைவார்கள் என்பதைவிட புதிதாக எதுவும் செய்வார்கள் என்றுதான் கருதுகிறேன். காங்கிரசில் மாநிலத் தலைவர் பதவி என்றெல்லாம் பேசுகிறார்கள். அவர் அரசியலுக்கு வந்தால்தானே பதவி பற்றி பேசமுடியும். ரஜினியும், கமலும் முதலில் அரசியலுக்கு வரட்டும்." என்று அவர் கூறினார். 
 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close