[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ரிசார்ட்டில் உள்ள தனது ஆதரவு எம்எல்ஏக்களை சந்திக்க டிடிவி தினகரன் இன்று புதுச்சேரி செல்கிறார்
 • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 4,309 கன அடியில் இருந்து 3,534 கன அடியாக குறைந்தது
 • BREAKING-NEWS ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மனோகரன் என்பவர் வீட்டில் 30 சவரன் நகை கொள்ளை
 • BREAKING-NEWS மருத்துவ கலந்தாய்வு இன்று தொடக்கம்
 • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரில் நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவு
 • BREAKING-NEWS இன்றைய பெட்ரோல் விலை: ரூ.71.37 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 60.06 காசுகளாகவும் உள்ளது
 • BREAKING-NEWS திருவாரூர்: மன்னார்குடியில் தனது ஆதரவாளர்களுடன் திவாகரன் ஆலோசனை
 • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள முருகனுக்கு உடல்நலக்குறைவு
 • BREAKING-NEWS அனைத்து அமைச்சர்களும் நாளை சென்னையில் இருக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
 • BREAKING-NEWS சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
 • BREAKING-NEWS நீட்தேர்வு விவகாரத்தில் நாளை எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்திற்கு திவாகரன் ஆதரவு
 • BREAKING-NEWS ஆட்சிக்கும் கட்சிக்கும் தொல்லை கொடுக்க சிலர் முயற்சிக்கின்றனர்: முதலமைச்சர் பழனிசாமி
 • BREAKING-NEWS சிறப்புப் பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு நாளை காலை 9 மணிக்கு தொடங்குகிறது
 • BREAKING-NEWS சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
அரசியல் 31 Jul, 2017 05:09 PM

குஜராத் காங். எம்எல்ஏக்கள் குதிரைபேர விவகாரம்: மாநிலங்களவையில் கூச்சல் குழப்பம்

gujarat-cong-the-mlas-are-the-horseshoes-affair-the-rumor-in-the-rajya-sabha

குஜராத் எம்.எல்.ஏ.க்கள் குதிரைபேர விவகாரத்தால் நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது.

டெல்லி நாடாளுமன்ற மக்களவையில் இன்று காலை அவை கூடியதும், மாநிலங்களவை தேர்தலுக்காக குஜராத் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க. விலைக்கு வாங்குவதாக புகார் கூறி, காங்கிரஸ் எம்.பி.க்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து முழக்கங்களை எழுப்பினர். பதிலுக்கு பாரதிய ஜனதா உறுப்பினர்களும் முழக்கங்களை எழுப்பினர். அவைத் தலைவர் அமைதிகாக்குமாறு எவ்வளவோ கேட்டுக் கொண்டும‌ அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

இதனிடையே குஜராத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க15 கோடி ரூபாய் வரை பாரதிய ஜனதா குதிரை பேரசம் பேசி வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.  பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஷாக்டிஸின், தங்களது எம்.எல்.ஏக்கள் 22 பேரை விலைக்கு வாங்க பாரதிய ஜனதா குதிரை பேரம் பேசி வருவதாக கூறியுள்ளார். ஜனநாயகத்தைக் காக்கவே காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பெங்களூருவிற்கு அழைத்து வரப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில், குதிரை பேரம் பேசப்படுதவாக காங்கிரஸ் கூறும் குற்றச்சாட்டை பாரதிய ஜனதா மறுத்துள்ளது. வெள்ளத்தில் குஜராத் மக்கள் திண்டாடிவரும் வேளையில், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சொகுதி விடுதியில் தங்கியிருப்பதாகவும் விமர்சித்துள்ளது. ஆகஸ்ட் 8ம் தேதி குஜராத்தில் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 6 பேர் பதவி விலகியுள்ளனர். அதில் 3 பேர் பாரதிய ஜனதாவில் இணைந்துள்ளனர். இதனால் அச்சமடைந்துள்ள காங்கிரஸ் நிர்வாகிகள், 44 எம்.எல்.ஏக்களை பெங்களூருக்கு அழைத்து வந்து வைத்துள்ளனர். இருப்பினும், காங்கிரஸில் இருந்து வெளியேறிய வகேலாவிற்கு ஆதரவானவர்கள் சொகுசு விடுதியில் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close