[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

வாட்ச் விலை ரூ.70லட்சம் - மீண்டும் சிக்கலில் சித்தராமையா

watch-price-is-rs-70-lakhs-siddaramaa-again-in-trouble

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவை சிக்கலில் மாட்டி விட்ட, 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாட்ச் விவகாரம் மீண்டும் தலையெடுக்க தொடங்கி உள்ளது.

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, விலை உயர்ந்த வாட்ச்சை அணிந்து இருந்தார். வைர கற்கள் பதிக்கப்பட்ட அந்த வாட்ச், சுவிட்சர்லாந்து நாட்டில் செயல்படும், ' ஹப்லாட்' என்ற வாட்ச் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அதன் விலை, 70 லட்சம் ரூபாய் என கூறப்பட்டது. இந்த வாட்ச் குறித்த சர்ச்சையை எதிர்க்கட்சிகள் எழுப்பிய போது, தர்மசங்கடத்தில் ஆழ்ந்த சித்தராமையா, துபாயில் உள்ள தனது நண்பர் டாக்டர் கிரிஷ் பிள்ளை சந்திர வர்மா என்பவர் கொடுத்ததாக கூறினார். ஒரு கட்டத்தில் இந்த பிரச்னை அப்படியே அமுங்கி போனது.

இந்நிலையில், குட்லாகி பகுதியில் டிஎஸ்பியாக பணியாற்றிய அனுபமா ஷெனாய்-க்கும் அதே பகுதியைச் சேர்ந்த அரசியல் பிரமூகர் ஒருவருக்கும் பிரச்சனை வெடித்தது. இதனை காரணம் காட்டி அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பினார். ஆனால் சில நாட்களுக்கு பின் அவர் அந்த கடிதத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்து கர்நாடக அரசை அணுகினார். இதற்கு மறுப்பு தெரிவித்த அரசு, அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதாக கூறி அவரை வீட்டிற்கு அனுப்பியது. இதனால் ஆத்திரமடைந்த அனுபமா இப்போது இந்த வாட்ச் பிரச்சனை மீண்டும் கிளப்பியுள்ளார். 

இதுதொடர்பாக சபாநாயகருக்கு புகார் மனு ஒன்றை அளித்துள்ள அனுபமா, உடுப்பியில் உள்ள மருத்துவமனை மற்றும் ஜோக் நீர்வீழ்ச்சியை மேம்படுத்தும் பணிக்கான 450 கோடி ரூபாய் டெண்டர் துபாயில் உள்ள கட்டுமான நிறுவனத்திற்கு பெற்று தந்ததற்கான லஞ்சமே இந்த வாட்ச் எனவும் தெரிவித்துள்ளார். சபாநாயகர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close