[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்த நடவடிக்கை: மாவட்ட தேர்தல் அலுவலர்
 • BREAKING-NEWS மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும்: ஹர்திக் படேல்
 • BREAKING-NEWS ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியை பறிக்கொடுக்கிறது
 • BREAKING-NEWS பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி தொலைபேசியில் வாழ்த்து
 • BREAKING-NEWS குஜராத், ஹிமாச்சல் மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி- உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
 • BREAKING-NEWS சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தொண்டர்கள் கொண்டாட்டம்
 • BREAKING-NEWS குஜராத்தில் மொத்த தொகுதி- 182; முன்னணி நிலவரம்- பாஜக -103, காங்கிரஸ் -78, மற்றவை-1
 • BREAKING-NEWS ஹிமாச்சலில் மொத்த தொகுதி- 68; முன்னணி நிலவரம்- பாஜக -41, காங்கிரஸ்-22, மற்றவை-5
 • BREAKING-NEWS குஜராத்தில் மொத்த தொகுதி- 182;முன்னணி நிலவரம்- பாஜக -98, காங்கிரஸ் -80, மற்றவை-4
 • BREAKING-NEWS குஜராத், ஹிமாச்சல் சட்டப்பேரவை தேர்தல்: இரண்டு மாநிலங்களிலும் பாஜக முன்னிலை
 • BREAKING-NEWS மேட்டூர் அணையின் 16 கண் உபரி நீர் போக்கியில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி
 • BREAKING-NEWS 8 மணிக்கு தொடங்குகிறது குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை
 • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் வார்டு வாரியாக மகளிர் குழு மூலம் பணப்பட்டுவாடா நடக்கிறது: தமிழிசை
 • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது
அரசியல் 29 Jul, 2017 07:24 PM

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொன்ன பசு-நரி கதை 

chief-minister-edappadi-palaniasamy

திருவண்ணாமலையில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா, தியாகத்துக்கு உதாரணமானவர் என்று கூறி பசு-நரி கதை ஒன்றைக் கூறினார். 

அவர் கூறிய பசு-நரி கதை: 

பசுக்கள் கூட்டம் ஒன்று காட்டுக்கு இரைதேடி பயணித்தது. பயணம் முடிந்து மாலையில் வீடு திரும்பிய பசுக் கூட்டத்தில் இருந்து நோய்வாய்ப்பட்ட பசு ஒன்று பின்தங்கியது. அதைப் பார்த்த நரியும், நரிக்குட்டி ஒன்றும் பசுவை இரையாக்க திட்டமிட்டன. இவ்வாறு எண்ணியவாறே பசுவைத் தாக்க நரிகள் முயன்றபோது, இதையறிந்த பசு, நரியிடம் விண்ணப்பம் ஒன்றை வைத்தது. அந்த பசு கூறுகையில், நரியாரே வீட்டில் எனது கன்று உள்ளது. இங்கு நீங்கள் என்னை இரையாக்கினால், எனக்கு என்னவானது என்று தெரியாமல் எனது கன்று தவிக்க நேரிடும். எனவே, வீட்டிற்கு சென்று கன்றிடம் தாயில்லாமல் எப்படி வாழ வேண்டும் என்று அறிவுரைகள் கூறி மீண்டும் இங்குவர அனுமதிக்க வேண்டும் என்று விண்ணப்பித்தது. இதைக் கேட்ட நரிகள் சிரித்தவாறே, யாரை ஏமாற்றப் பார்க்கிறாய். நீ வீட்டிற்கு சென்றுவிட்டால், மீண்டும் இங்குவர மற்ற பசுக்களும், உனது கன்றும் அனுமதிக்காது என்று கூறின. ஆனால் பசுவோ, சொன்ன சொல் தவறினால் அது எனது இனத்துக்கே இழுக்கை ஏற்படுத்தி விடும் என்று கூறி உருக்கமாக வேண்டியது. பசுவின் உருக்கமான வேண்டுகோளை கேட்ட நரிகள், வீட்டிற்கு செல்ல அனுமதித்தன. இதையடுத்து வீட்டுக்கு வந்த பசு, கன்றைக் கட்டித் தழுவி காட்டில் நடந்தவற்றைக் கூறியது. தாயில்லாமல் இந்த உலகத்தில் நல்ல பிள்ளையாய் வாழ வேண்டும் என்று அறிவுரை கூறி விடைபெற முயன்றது. ஆனால், பசுவை வழிமறித்த கன்று, அம்மா நீ இல்லாமல் என்னால் இந்த உலகத்தில் வாழ முடியாது; உன்னுடன் நானும் காட்டுக்கு வருகிறேன் என்று கூறியது. ஆனால், கன்றை சமாதானம் செய்த பசு காட்டுக்கு சென்றது. அங்கு, கன்று நரிகளிடம் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு பசு அதிர்ச்சியடைந்தது. அருகில் சென்று பார்த்தபோது, நரிகளிடம் கன்று என்னையும் உங்களுக்கு இரையாக்கிக் கொள்ளுங்கள். எனது அம்மா இல்லாமல் நான் ஒருக்கணமும் வாழமுடியாது என்று கெஞ்சியதாம். இதைக் கேட்ட குட்டி நரி, அம்மா-பிள்ளை பாசம் என்றால் என்னவென்பதை இப்போது நான் புரிந்துகொண்டேன். இவர்களைக் கொல்லாமல் விட்டுவிட வேண்டும் என்று அம்மா நரியிடம் சொன்னதாம். இதைக் கேட்ட அம்மா நரி பசுவையும், கன்றையும் வணங்கி காட்டுக்குள் சென்று விட்டதாம்.

இப்படிக் கதை சொல்லி முடித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பசுவைப் போல் தியாகங்கள் செய்து அதிமுகவை வளர்த்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. அவரது குழந்தைகளான நாமும் தியாகங்கள் செய்து கட்சியை வளர்க்க வேண்டும் என்று கட்சியினரைக் கேட்டுக் கொண்டார். ஜெயலலிதா அம்மா பசு என்றும் கன்றுகள் தாங்கள் என்றும் குறிப்பிட்ட பழனிசாமி நரி என்று யார் எனக் குறிப்பிடவில்லை. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close