[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

கொந்தளிக்க வேண்டிய தமிழக அரசு வாய்பொத்தி மவுனம் சாதிக்கிறது: மு.க.ஸ்டாலின்

tamilnadu-government-mentally-tranquilizers-to-scream-mk-stalin

கொந்தளிக்க வேண்டிய தமிழக அரசு வாய்பொத்தி மவுனம் சாதிக்கிறது: மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வு விவகாரத்தில் மாநில உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளித்து எழ வேண்டிய தமிழக அரசு, வாய்பொத்தி மவுனம் சாதிப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு திமுக நடத்தும் மனிதச்சங்கிலியில், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் கட்சி பேதமின்றி பங்கேற்க வேண்டும். மாநில உரிமைப் பறிப்புக்கு எதிராகக் கொந்தளித்து எழ வேண்டிய தமிழக அரசு, டெல்லி ஆட்சியாளர்களிடம் கை கட்டி, வாய் பொத்தி கெஞ்சிக் கொண்டிருக்கிறது. நீட் தேர்விலிருந்து தற்காலிக விலக்கு பெறுவது தப்பிக்கும் தந்திரம். அதனைக் கைவிட்டு நிரந்தர தீர்வு கிடைக்க உரத்துக் குரல் கொடுக்க வேண்டும். தவணை கேட்பதற்கும், தள்ளிப்போடுங்கள் என்று கெஞ்சுவதற்கும் நீட் தேர்வு விலக்கு விவகாரம் என்பது மத்திய அரசு தனது விருப்பம் போல் தரும் மானியமல்ல. நாடு முழுவதும் ஒரே தேர்வு என அறிவித்துவிட்டு, ஒரே மாதிரி கேள்வித்தாள் வழங்காததால் நீட் தேர்வை ஒட்டுமொத்தமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close