[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

எந்தக் கட்சியையும் தேடிப்போக வேண்டிய நிலை மக்கள்நலக் கூட்டணிக்கு இல்லை:தா.பாண்டியன் புதிய தலைமுறைக்கு பேட்டி

t-pandian-exclusive-interview-about-people-welfare-front-and-dmdk-decision

தேர்தல் ‌கூட்டணி தொடர்பாக யாரிடமும் யாசகம் கேட்டு நிற்க வேண்டிய நிலை மக்கள்நலக் கூட்டணிக்கு இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் தா.பாண்டியன் கூறியுள்ளார். இது குறித்து தலைமைச் செய்தியாளர் மகாலிங்கம் பொன்னுசாமியிடம் அவர் பகிர்ந்து கொண்ட கருத்துகள் விவரம் வருமாறு:

கேள்வி: திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்காலத்தில் மக்கள் நலக்கூட்டணி இருக்காது என்று குற்றச்சாட்டினை கூறிவருகிறார்கள் ? இதுகுறித்து நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: கடந்த கால கசப்பான அனுப்பவத்திலிருந்து விளைந்திருக்கிற காரணத்தால், மக்கள் நலக்கூட்டணி நிலைக்கும், நீடிக்க வேண்டும். என விரும்புகிறேன். மற்றவர்கள் வந்தால் எல்லோரும் சமமாக இருப்பர். அவரவர் கொள்கையை அவரவர் பின்பற்றலாம். ஒப்புக்கொண்ட கொள்கையை, தமிழ்நாட்டு மக்களுக்கு நிறைவேற்ற வேண்டும். ஒரு மாநில அரசு எதை செய்யலாம் என்று இருக்கிறது. அதை செய்யலாம். ஊழல் இல்லாமல் செய்ய வேண்டும்.

கேள்வி: விஜயகாந்த் வந்தால்தான் மக்கள்நலக்கூட்டணிக்கு இன்னும் வலுவூட்டமுடியுமா?

பதில்: இந்த பெயர்களை சொல்லி என்னிடம் கேட்காதீர்கள். நீண்ட காலமாக அவர்களை பற்றி தெரியும். நல்ல வேளை வள்ளுவனே இந்த உலகத்தில் பிறக்காமல் போனது நல்லது. இப்படி ஒரு மனிதரை வைத்து எல்லா அரசியலையும் குழப்பாதீர்கள்.

கேள்வி- உண்மையாக விஜயகாந்திற்கு அவ்வளவு டிமாண்ட் உள்ளதா?

பதில்: நீங்கள் தமிழ்நாட்டில் தானே உள்ளீர்கள். உங்களுக்கு இந்த உலகமே தெரியதா? கம்யூனிஸ்டு கட்சி, இவர்கள் பிறப்பதற்கு முன்பு பிறந்தது. பல அக்னிகளையும், நெருப்புகளையும் சந்தித்தது. எனவே கம்யூனிஸ்டுகள் யாரிடமும், யாசகமும் கேட்கின்ற பிச்சைக்காரன் அல்ல. அது சுய ஒளிவுடன், சுயகொள்கையுடன் நடக்கும். பெரிய கட்சி, சிறிய கட்சி என்ற வேறுபாடு எங்களுக்கு அவசியமில்லை

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close