[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

மாட்டிறைச்சி விவகாரம் - எதிர்க்கட்சிகளை உத்தரவு மூலம் சமாளித்த மோடி

modi-regarding-beef-issue

 

மாட்டிறைச்சி பெயரிலான தாக்குதல்களுக்கு மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளை அமைதிப்படுத்தும் விதமாக அனைத்துக்கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது. இக்கூட்டத்தில் பல்வேறு துறைகளின் கீழ் 16புதிய மசோதாக்களை இரு அவைகளிலும் மத்திய அரசு அறிமுகப்படுத்துகிறது. மழைக்கால கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து புயலைக்கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. குறிப்பாக பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னான சில்லரை வர்த்தகத்தின் வீழ்ச்சி, ஜி.எஸ்.டி விவகாரம், மாட்டிறைச்சி பெயரின் பேரில் தாக்குதல் போன்ற பல்வேறு பிரச்சனைகளை அவையில் எழுப்பி அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்திருந்தன. 

இந்நிலையில், மழைக்கால கூட்டத்தொடருக்கான அனைத்துக்கட்சி கூட்டம் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த குமார் கலந்து கொண்டனர். மேலும், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இக்கூட்டத்தை புறக்கணித்தது. இந்நிலையில் வடமாநிலங்களில் மாட்டிறைச்சி பெயரில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிகழ்வுகள் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து பெரும் பிரச்சனை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன. இதனால், அவர்களை சமாளிக்கும் விதமாக, மாட்டிறைச்சி பெயரிலான தாக்குதல்களுக்கு எதிராக மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி இன்றைய கூட்டத்தில் பேசியுள்ளார். மேலும், பசு பாதுகாப்பு என்ற பெயரில் தனி நபர்கள் சட்டத்தை கையில் எடுப்பதற்கு மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாகவும் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close