[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை

தக்காளி, வெங்காய விலையை குறைக்க நடவடிக்கை: செல்லூர் ராஜு

sellur-raju-about-price-hike-of-vegetables

 

தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு உறுதியளித்துள்ளளார்.

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்த பிறகு நேரமில்லா நேரத்தில் பேசிய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், தற்போது சந்தையில் தக்காளி, சின்ன வெங்காயம் ஆகியவை கிலோ 100 ரூபாய் வரை விற்கப்படுவதாகக் கூறினார். இவற்றை அரசின் கூட்டுறவு அங்காடிகள் மூலம் நியாயமான விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும்போது அந்த பொருட்களின் விலையை குறைக்க மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து நிதியம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். தற்போது தக்காளி, சின்ன வெங்காயத்தின் வரத்து குறைவாக உள்ளதாகவும், இருப்பினும் பண்ணைப் பசுமைக் காய்கறி கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 40 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் தெரிவித்தார். அதேபோல தக்காளியின் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு உறுதியளித்தார்.
 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close