[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

பூசி மெழுகுகிறார் முதலமைச்சர்: ஸ்டாலின் குற்றச்சாட்டு

stalin-about-edappadi

குட்கா விவகாரத்தில் எங்களின் குற்றச்சாட்டுகளுக்கு துளிகூட பதிலளிக்காமல் முதலமைச்சர் சட்டப்பேரவையில் பூசி மெழுகுகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

குட்கா விவகாரத்தில் அமைச்சர் மற்றும் காவல் உயர் அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக முதலமைச்சர் அளித்த விளக்கம் திருப்தி அளிக்கவில்ல என்று கூறி திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், "குட்கா விவகாரம் தொடர்பாக போதிய ஆதாரங்களை சபாநாயகரிடம் நாங்கள் அளித்ததால் அவர் இன்று ஓரளவிற்கு பேச அனுமதி தந்தார். நான் பேசும்போது, இவ்விவகாரத்தில் நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்றால், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அப்போதுதான் முறையான விசாரணை நடைபெறும் என்றேன். ஆனால் இதற்கு பதிலளித்த முதலமைச்சரோ, எங்களின் குற்றச்சாட்டுகளுக்கு துளி கூட பதிலளிக்காமல் பூசி மெழுகிறார்" என தெரிவித்தார்.

மேலும் இவ்விவகாரத்தில் விஜயபாஸ்கரையும், காவல்துறை உயர் அதிகாரிகளையும் காப்பாற்ற நாடகம் நடத்தப்படுவதாக குற்றம் சாட்டிய மு.க.ஸ்டாலின் சிபிஐ விசாரணை நடைபெற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close