[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கச்சத்தீவு திருவிழா முடிந்த நிலையில் 5 நாட்களுக்கு பின் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்
  • BREAKING-NEWS நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக மும்பை புறப்பட்டார் ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக இன்று இரவு மும்பை செல்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS எந்த மொழியில் நடித்தாலும் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி - நடிகர் அரவிந்த் சாமி
  • BREAKING-NEWS தனது நடிப்புத் திறமையை பலவிதங்களில் வெளிப்படுத்தியவர் ஸ்ரீதேவி - இளையராஜா
  • BREAKING-NEWS ஜெயலலிதா சிலை அமைக்கப்பட்டது குறித்து விமர்சனங்கள் வருகிறது, குறை இருந்தால் சிற்பியே நிவர்த்தி செய்வார் - அமைச்சர் கடம்பூர் ராஜு
  • BREAKING-NEWS இந்தியாவில் மிகவும் திறமையான நடிகையாக விளங்கிய ஸ்ரீதேவியின் மறைவுக்கு இரங்கல் - இளையராஜா

தமிழக அரசுக்கு ஆளுநர் உத்தரவு

governor-orders-tn-govt-to-take-action-regarding-mla-issue

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க தமிழக சபாநாயகர் மற்றும் தலைமை செயலாளருக்கு தமிழக ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். 

அதிமுக எல்எல்ஏக்கள் குதிரை பேரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து புகார் மனு அளித்தார். குதிரை பேரம் நடைபெற்றதால் ஆட்சியை கலைக்க உத்தரவிட வேண்டும் என்றும் ஸ்டாலின் அப்போது அவரிடம் வலியுறுத்தினார். மேலும் இந்த பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். ஸ்டாலினின் இந்த புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி தமிழக சபாநாயகர் மற்றும் தலைமை செயலாளருக்கு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளார். ஆங்கில தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ ஒன்றில், நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கு வாக்களிக்க அதிமுக எம்.எல்.ஏக்கள் பல கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்தே ஸ்டாலின் ஆளுநரிடம் இவ்விவகாரம் தொடர்பாக ஆளுநரிடம் புகார் அளித்தார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close