[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

விரைவில் பதில் சொல்வேன்: கார்டன் சம்பவம் பற்றி ஓபிஎஸ்

o-paneerselvam-says-about-poes-garden-incident

போயஸ் கார்டனில் நடைபெற்ற சம்பவம் குறித்து விரைவில் பதில் சொல்வேன் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

போயஸ் கார்டனில் இருந்து அடித்து துரத்தப்பட்டதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, இன்று பகீர் குற்றச்சாட்டு தெரிவித்தார். கார்டனில் இருக்கும், தனது சகோதரர் தீபக் அழைப்பின் பேரில், அங்கு சென்று சென்றதாவும், ஆனால் தீபக், சசிகலா தரப்புடன் சேர்ந்து தன்னை கொல்ல முயற்சி செய்வதாகவும் அவர் பகிரங்க புகார் தெரிவித்தார்.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், போயஸ் கார்டனில் நடைபெற்ற சம்பவம் குறித்து விரைவில் பதில் சொல்வேன் என கூறியுள்ளார். முன்னதாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எய்மஸ் மருத்துவமனை மதுரையில் அமைய வேண்டும் என்பதே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் விருப்பம். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால் பொதுமக்கள் பயன் பெறுவார்கள் என்றும் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close