[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது
  • BREAKING-NEWS வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை
  • BREAKING-NEWS சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
  • BREAKING-NEWS தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு
  • BREAKING-NEWS தமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்

சென்னையில் அதிமுக அமைச்சர்கள்‌ தேர்தல் அறிக்கை குறித்து திடீர் ஆலோசனை

election-manifesto-aiadmk-ministers-meeting-in-private-hotel

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில், அதிமுக அரசின் அமைச்சர்கள், இரண்டாவது நாளாக கூடி ஆலோசனை நடத்தினர்.

ஆழ்வார்பேட்டை புனித மேரி சாலையில் உள்ள அந்த தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், பழனியப்பன், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த ஆலோசனையில், தேர்தல் அறிக்கை தயாரிப்பது குறித்தும், தேர்தல் பணிகள் பற்றியும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது

நேற்று மாலை 5 மணி முதலே இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. பத்து மணிக்கு பின்னரும் நீடித்த இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர், அமைச்சர்கள் யாரும் ஹோட்டலை விட்டு வெளியில் வரவில்லை என்றும், அனைவரும் கூட்ட அரங்கிலேயே இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதேபோன்ற ஆலோசனை கூட்டம், மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில், நேற்று முன்தினம் நடைபெற்றதாக தெரிகிறது. சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகும் அதிமுக, வேட்பாளர் பட்டியலை விரைவில் இறுதி செய்யும் என்று கூறப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close