குற்றங்களை மறைக்க அதிமுகவும், திமுகவும் விளம்பர போட்டியில் ஈடுபடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மணல், கிரானைட் போன்ற இயற்கை வளங்கள் கொள்ளை போவதை அனுமதித்துவிட்டு, விளம்பரங்கள் வாயிலாக அவற்றை மறைத்துவிடலாம் என இரு கட்சிகளும் கருதுவதாக விமர்சித்துள்ளார். இதுபோன்ற விளம்பரங்களுக்காக இரு கட்சிகளும் தொடர்ந்து பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிடுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் மேடையில் அரங்கேற்றப்படும் இதுபோன்ற நாடகங்களை அடையாளம் கண்டு, இரு கட்சிகளையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
‘கேப்மாரி’ படத்திற்குத் தடை கோரிய மனு தள்ளுபடி
ஒரே ஆண்டில் 3 ஆவது முறையாக தேர்தலை சந்திக்கும் இஸ்ரேல்
இனப்படுகொலை குற்றச்சாட்டு: சர்வதேச நீதிமன்றத்தில் ஆங் சான் சூச்சி மறுப்பு
ஆற்றில் புகுந்த முதலைகள் - மீன்பிடித் தொழிலாளர்கள் அச்சம்..!
பாம்பு கடித்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு - மருத்துவமனை மீது பெற்றோர் குற்றச்சாட்டு