[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

ஜெயலலிதாவிற்கு மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து: மக்கள் வரிப்பணத்தில் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுவதாக குற்றச்சாட்டு

mk-stalin-birthday-wishes-to-jayalalaithaa

காஞ்சிபுரம் மாவட்டம் ஆப்பூரில் நமக்கு நாமே பயணத்தின் இறுதி நிகழ்ச்சியாக உறுதி மொழி ஏற்பு ;நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

நமக்கு நாமே பயணத்தில் தமிழகம் முழுவதும் 11100 கிலோ மீட்டர் பயணித்து விவசாயிகள், வியாபாரிகள், மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து மனுக்களை பெற்றேன். தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு வரும் பிப்ரவரி 24ம் தேதி பிறந்த நாள். அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இது அரசியல் மரபு. ஆனால் அவரது வயதை குறிப்பிடும் வகையில், மக்கள் வரிப்பணத்தில் 68 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை நடத்துகிறார்கள். தமிழகத்தில் ஸ்டிக்கர் கலாச்சாரம் பெருகிவிட்டது.

சென்னையில் ஏற்பட்ட மழை பாதிப்பு செயற்கையாக ஏற்பட்டது. செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படாததால் தான் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன், செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்து நீதி விசாரணை நடத்துவோம். தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வாங்கிக்கொடுப்போம். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் முறையாக சென்றடையவில்லை.

அதிமுக ஆட்சியில் அண்ணா நூலகத்தை மூட முயற்சி நடந்தது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கொண்டுவரப்பட்ட மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்திற்கு மூடு விழா காணப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் 110 விதியை பயன்படுத்தி 600க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அப்படி வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளில் 580க்கும் மேற்பட்ட அறிவிப்புகள் கானல் நீராக உள்ளது. 20 லிட்டர் இலவச குடிநீர் உள்பட பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஆனால் திடீரென்று சென்னைக்கு மட்டும் 100 இடங்களில் ஸ்மார்ட் கார்டு மூலம் குடிநீர் தருவோம் என்று அறிவித்துள்ளார்கள். ஆனால் அதுவும் ஏமாற்றம் தரும் அறிவிப்பு தான்.

இந்த ஆட்சியில் ஒரு மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யப்படவில்லை. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது . பெண்களுக்கு பாதுகாப்பில்லை. தொழில்துறையில் முதலீடு செய்ய வலியுறுத்தி பல்வேறு மாநில முதல்வர்கள் தமிழகத்திற்கு வந்தது போல், நமது மாநில முதலமைச்சர் ஜெயலலிதா எங்காவது சென்று வந்தாரா? உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து முதல்வருடன் விவாதிக்க தயாராக உள்ளேன். உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படவில்லை. மதுக்கடைகளால் மக்கள் பெரும் பாதிக்கப்பட்டுள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும். காவல்துறைக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்படும். லோக் ஆயுக்தா கொண்டுவரப்படும் என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close