[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்
  • BREAKING-NEWS கொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

எதிர்க்கட்சி தலைவர் பதவியை இழந்தார் விஜயகாந்த்

vijayakanth-loses-oppostion-parties-leader-post

தேமுதிக எம்எல்ஏக்கள் 8 பேர் பதவி விலகிவிட்டதால், சட்டப்பேரவை விதிப்படி, அக்கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துவிட்டதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டப்பேரவை செயலர் ஜமாலுதீன் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில்,பேரவையில் தேமுதிக உறுப்பினர்களின் எண்ணிக்கை 20ஆக குறைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரவையில் 24 குறைவெண் கொண்ட எந்தக் கட்சியும் இல்லாததால், எதிர்க்கட்சித் தலைவர் என்று வேறு எந்தக் கட்சித் தலைவரையும் அங்கீகரிக்க இயலாது என சபாநாயகர் அறிவித்துள்ளதாக ஜமாலுதீன் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, பேரவை விதியின் படி, எதிர்க்கட்சித் தலைவராக பேரவைத் தலைவரால் அங்கீகரிப்பதற்குரிய தகுதியை விஜயகாந்த் இழப்பதன் காரணமாக, அவர் அந்தப் பதவியையும், அதற்கான சலுகைகளையும் இழக்கிறார் என்று சபாநாயகர் தெரிவித்திருப்பதாக ஜமாலுதீனின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close