[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாக். டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் நீக்கம்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் மெட்ரோ நீரின் விலை அதிகரிப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு

தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் வரும் 22-ம் தேதி முதல் நேர்காணல்

dmdk-candidate-selection-begins-on-february-22

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் வருகிற 22-ம் தேதி முதல் நேர்காணல் நடத்தப்பட இருப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

மார்ச் 1-ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெறும் நேர்காணலில் விருப்ப மனு அளித்தவர்கள் மாவட்ட வாரியாக நேரில் வந்து தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நேர்காணலுக்கு வருவோர் கட்சி உறுப்பினர் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, கல்விச் சான்றிதழ்களின் அசல் ஆவணங்களைக் கொண்டு வர வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தனித் தொகுதிக்கு போட்டியிட விரும்புவோர், சாதிச் சான்றிதழின் அசலை கொண்டு வரவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close