[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி
  • BREAKING-NEWS தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம்
  • BREAKING-NEWS சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி

500, 1000 நோட்டுகளை மாற்ற கால அவகாசம் கொடுத்திருக்கலாம்: மு.க.ஸ்டாலின்

stalin-appreciate-modi-plan

ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை திமுக வரவேற்பதாகவும், ஆனால் ரூபாய் நோட்டுகளை மாற்ற கால அவகாசம் கொடுத்திருக்கலாம் என்றும் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறுகையில், ‘மத்திய அரசின் இந்த திடீர் அறிவிப்பு வரவேற்புக்குரியது என்றும் இதன்மூலம் கருப்பு பணத்தை முற்றிலுமாக ஒழிக்க முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். ஆனால் இந்த அறிவிப்பு குறித்தும், நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களுக்கு முன்பே தெரிவித்து, ரூபாய் நோட்டுகளை மாற்ற கால அவகாசம் கொடுத்திருக்கலாம்’ எனவும் கருத்து கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close