[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக

எஸ்விஎஸ் கல்லூரி விவகாரத்தில் திமுக மீதான குற்றச்சாட்டிற்கு கருணாநிதி மவுனம் காப்பது ஏன்? மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் கேள்வி

people-had-lost-confidence-in-karunanidhi-vaiko

மக்கள் நலக் கூட்டணியின் அடுத்தகட்ட தேர்தல் பரப்புரை ‌வரும் 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் கொங்கு மண்டலத்தில் நடைபெறும் என அதன் ஒருங்கிணைப்‌‌பாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மதிமுகவில் இணைந்த கூட்டத்தில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். கெயில், எஸ்விஎஸ் கல்லூரி உள்ளிட்ட விவகாரங்களில் திமுக பதில் கூற மறுப்பது ஏன் என்று வைகோ கேள்வி எழுப்பினார்.

மக்கள் நலக்கூட்டணியின் அடுத்தகட்ட தேர்தல் பிரச்சாரம் வரும் 20,21 தேதிகளில் கொங்கு மண்டலத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளும் என்று அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ், பாமக உட்பட பல்வேறு மாற்றுகட்சிகளை சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் மதிமுகவில் இனைந்தனர்.இந்த நிகழ்ச்சியில் செய்தியளர்களிடம் பேசிய வைகோ அரசு ஊழியர்களின் கோரிக்கைகளில் நியாயம் உள்ளது.பழைய ஒய்வூதிய திட்டம் திமுக ஆட்சிகாலத்தில் தான் ரத்து செய்யப்பட்டது. இம்முறையை

ரத்து செய்வதாக கடந்த தேர்தலில் அதிமுக வாக்குறுதி அளித்திருந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளில் அதனை ரத்து செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

ஜல்லிக்கட்டு , மீனவர் பிரச்சனை, கெயில், காவிரி போன்ற பல்வேறு பிரச்சனைகளில் மத்திய அரசு தமிழக மக்களுக்கு வஞ்சகம் இழைத்து வருகிறது.Svs மருத்துவ கல்லுரிக்கு திமுக ஆட்சிகாலத்தில் தான் அனுமதி வழங்கப்பட்டது. ஜி. ராம கிருஷ்ணன் கருத்துக்கு பதில் கூறும் கருணாநிதி, svs, Gail, போன்ற பல்வேறு விவகாரத்தில் திமுகவின் மீதான குற்றச்சாட்டுக்கு பதில் கூற மறுப்பது ஏன் என்றும் வைகோ கேள்வி எழுப்பினார். கருணாநிதி மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டார்கள்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close