[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS பேரவை தேர்தலில் பாஜக கூட்டணியே ஆட்சியமைக்கும் - பொன்.ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS டெல்லியில் மைக்ரோசாஃப்ட் இணை-நிறுவனர் பில்கேட்ஸ், பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் சென்னையை தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் – சீமான்
  • BREAKING-NEWS அதிசயம், அதிர்ஷ்டத்தை நம்புகிறவர் ரஜினி - அமைச்சர் ஜெயக்குமார்

இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்பமனு தாக்கல் செய்யலாம்

tamil-nadu-local-body-polls-dmk-announcement

தமிழக சட்டப்பேரவை இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘வருகிற 19.11.2016 அன்று நடைபெறவுள்ள தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலில், போட்டியிட விரும்புகின்றவர்கள் அதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து 20-10-2016 வியாழக்கிழமை அன்று மாலை 6 மணிக்குள், அண்ணா அறிவாலயத்திலுள்ள திமுக அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வேட்பாளர் நேர்காணல் 21-10-2016 அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் காலை 10.00 மணியளவில் நடைபெறும். வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் - ரூ. 25,000. விண்ணப்ப படிவம் தலைமைக் கழகத்தில் ரூ. 1,000/-வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.’ இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close