[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றியதற்கு எதிரான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கஜா புயலால் வீடுகளை இழந்த 50 விவசாயிகளுக்கு வீடு கட்டித்தரப்படும் - நடிகர் ராகவா லாரன்ஸ்
  • BREAKING-NEWS நக்கீரன் கோபாலுக்கு எதிரான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறைக்கு டிச.21ம் தேதி வரை தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS தொடர் மழையால் வேலூர், திருவாரூர், புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS தொடர் மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.78.88 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.74.99 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஓசூர் அருகே தம்பதி ஆணவக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சூடுகொண்டப்பள்ளியில் நந்தீஷ் பெற்றோரிடம் எஸ்.சி., எஸ்.டி ஆணைய துணைத்தலைவர் முருகன் விசாரணை

4 தொகுதிகளும்...தேர்தலுக்கான காரணங்களும்...

the-reasons-for-elections-being-conducted-in-3-constituencies-in-tn-1-constituency

தமிழகத்தில் தேர்தல் ரத்து செய்யப்பட்ட இரு தொகுதிகளுக்கும், இடைத்தேர்தல் நடைபெற வேண்டிய ஒரு தொகுதிக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் புதுச்சேரி முதலமைச்சரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த நான்கு தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுவதற்கான காரணங்கள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

அரவக்குறிச்சி தொகுதியில், அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி, தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ.வாக இருந்த கே.சி.பழனிச்சாமி உள்ளிட்டோர் களத்தில் இருந்தனர். தொகுதிக்கு உட்பட்ட அய்யம்பாளையத்தில் அ.தி.மு.க பிரமுகர் அன்புநாதன் என்பவர் வீடு மற்றும் குடோனிலிருந்து வருமான வரித் துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு இந்திய அரசு என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தையும், சுமார் 5 கோடி ரூபாயையும் வருமான வரித் துறையினர் பறிமுதல் செய்தனர். அதேபோல தி.மு.க வேட்பாளர் கே.சி.பழனிச்சாமிக்கு சொந்தமான கரூரில் உள்ள வீடு, லாட்ஜ் மற்றும் சென்னையில் உள்ள வீடு ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி, சுமார் 1.5 கோடி ரூபாய் பணத்தை கைப்பற்றினர். இதுமட்டுமல்லாமல் தொகுதி முழுவதும் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் வாக்காளர்களுக்கு கொடுக்கப்படவிருந்த பல்வேறு பரிசுப் பொருள்களும் கைப்பற்றப்பட்டன. இதனால், அரவக்குறிச்சி தொகுதிக்கான வாக்குப்பதிவை, மே 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக, வாக்குப்பதிவுக்கு இரு நாட்களுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டது. ஒரு சில நாட்களிலேயே வாக்குப் பதிவை ஜூன் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, பின்னர் தேர்தலையே தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இத்தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 80 வாக்காளர்கள் உள்ளனர்.

இதேபோல் வாக்குப்பதிவு நடைபெறவிருந்த மே 16ஆம் தேதிக்கு, முதல் நாள் இரவு தஞ்சாவூர் தொகுதியில் அதிக அளவிற்கு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக கூறி தேர்தல் திடீரென நிறுத்தப்பட்டது. இத்தொகுதிக்கு அதே மாதம் 22ஆம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், இரண்டு நாட்கள் இடைவெளியில் தேர்தல் வைப்பதால் எந்த மாற்றமும் ஏற்படாது என்று கூறி, தேர்தலை மூன்று மாதம் கழித்து நடத்த வேண்டும் என்று, தஞ்சாவூர் பா.ஜ.க வேட்பாளர் ராமலிங்கம், அரவக்குறிச்சி பா.ம.க வேட்பாளர் பாஸ்கர் ஆகியோர் வழக்கு தொடர்ந்ததை அடுத்து தேர்தல் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. தஞ்சை தொகுதியில் அ.தி.மு.க சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ ரெங்கசாமி, தி.மு.க சார்பில் அஞ்சுகம் பூபதி உள்ளிட்ட 11 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். தஞ்சையை பொறுத்தவரையில், மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 68 ஆயிரத்து 33.

மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் மணிமாறனை 22ஆயிரத்து 992 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் எஸ்.எம்.சீனிவேல். எனினும் வாக்குப்பதிவுக்கு முதல் நாளில் இருந்தே உடல் நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், எம்.எல்.ஏ பதவி ஏற்காமலேயே மே 25ஆம் தேதி உயிரிழந்தார்.‌ இதனால் இத்தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இத்தொகுதியில் மொத்த வேட்பாளர்கள், 2 லட்சத்து 79 ஆயிரத்து 307 பேர் உள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால், தேர்தலில் போட்டியிடாத முன்னாள்‌ மத்திய அமைச்சர் நாராயணசாமி முதலமைச்சராக பதவியேற்றார். இதனால், நாராயணசாமி 6 மாதத்திற்குள் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக ஆக வேண்டும் என்ற நிலையில், அதற்கு வசதியாக நெல்லித்தோப்பு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜான்குமார் கடந்த மாதம் 13ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதியில் முதலமைச்சராக உள்ள நாராயணசாமி போட்டியிடுகிறார். நெல்லித்தோப்பு தொகுதியை பொறுத்தவரையில், மொத்தம் 31ஆயிரத்து 343 வாக்காளர்கள் உள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close