[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் இடதுசாரிக் கட்சிகள் பங்கேற்றது மகிழ்ச்சி: திருமாவளவன்

thirumavalavan-press-meet

காவிரி விவகாரம் தொடர்பாக திமுக ஒருங்கிணைத்த கூட்டத்தில் மக்கள் நலக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள இடதுசாரிக் கட்சிகள் பங்கேற்றது மகிழ்ச்சி என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 13-ல் நடந்தது. இதில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாகவும், காவிரி விவகாரம் தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவுகளை கர்நாடக அரசு மதிக்கவில்லை என்பதை கண்டிக்கும் வகையிலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுகுறித்து பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், காவிரி விவகாரம் தொடர்பாக திமுக ஒருங்கிணைத்த அனைத்து விவசாயிகள்‌ சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அழைப்பு விடுக்காததால் மக்கள் நலக் கூட்டணியில் குழப்பம் ஏற்படும் என தாம் கருதவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டமும், அதனை தொடர்ந்து 10 லட்சம் பேர் பங்கேற்கவிருக்கும் மாபெரும் பேரணியும் நடைபெறும் எனவும் அவர் கூறினார். சென்னை அசோக் நகரில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாணவர் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close