[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை

தமிழகத்திற்கு பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை: வைகோ பேட்டி

vaiko-says-state-is-not-required-to-appoint-a-responsible-chief

தமிழகத்துக்கு பொறுப்பு அல்லது தற்காலிக முதலமைச்சரை நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அப்போலோ மருத்துவமனைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் சென்றார், அங்கு முதலமைச்சரின் நலம் குறித்து மருத்துவர்களிடம் வைகோ கேட்டறிந்தார். லண்டனில் இருந்து வந்துள்ள சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட்டையும் வைகோ சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்துக்கு 2 முறை வருகை தந்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்ததற்காக அவருக்கு வைகோ நன்றி தெரிவித்தார். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ ‘முதலமைச்சர் விரைவில் முழு ஆரோக்கியத்துடன் வீடு திரும்புவார்’ என நம்பிக்கை தெரிவித்தார்.

பின்னர் திடீரென ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் வித்யாசகர் ராவை வைகோ சந்தித்தார். இச்சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ‘ஆளுநர் வித்யாசகர் ராவ் என்னுடைய பழைய நண்பர். இந்த சந்திப்பில் அரசியல் எதுவும் இல்லை. முற்றிலும் நட்பு ரீதியாக மட்டுமே சந்தித்தேன். இது மரியாதை நிமிர்த்தமான சந்திப்பு. நான் அரசியல்வாதி என்பதால் நீங்கள் அரசியல் சந்திப்பு என்று நினைக்கிறீர்கள்.தமிழகத்துக்கு பொறுப்பு அல்லது தற்காலிக முதலமைச்சரை நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை. 2009-ம் ஆண்டு இலங்கை போரின் போது போரை நிறுத்த வேண்டும் என்று போராடினோம். அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி, ராமச்சந்திரா மருத்துவமனையில் 45 நாட்கள் அனுமதிக்கப்பட்டிருந்தாரே. அப்போது பொறுப்பு முதல்வர் கேள்வி எழவில்லையே’ இவ்வாறு வைகோ தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close