[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS ஆதார் செல்லுமா ? செல்லாதா ? என்பது குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு

தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கு உயர் நீதிமன்றம் தடை: திமுக தலைவர் கருணாநிதி வரவேற்பு

tn-local-body-election-cancelled-by-high-court-dmk-leader-karunanidhi-welcomes

தமிழகத்தில் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த உள்ளாட்சி தேர்தலை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதற்கு திமுக தலைவர் கருணாநிதி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 28-9-2016 அன்று நான் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் பதில் தருவது போலத்தான் நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது. அவசர அவசரமாக தேர்தல் தேதியை அறிவித்தது பற்றியும், எதிர்க் கட்சிகளுக்கு போதிய அவகாசம் கொடுக்காதது பற்றியும் நீதிபதி சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.

மாநிலத் தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் இவைகளை எண்ணிப் பார்க்காமல், தேர்தல் தேதியை அவசர அவசரமாக அறிவித்ததால், தமிழகம் முழுவதுமுள்ள அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இரவு பகல் பாராமல் வேட்பாளர்களைத் தேர்வு செய்து, வேட்பு மனு தாக்கல் செய்ய அதிகச் சிரமம் எடுத்துள்ளார்கள். தேர்தல் பணிகளையும், பிரச்சாரங்களையும் ஆற்றுவதற்கு அவர்களுக்கெல்லாம் மேலும் வாய்ப்பு கிடைத்தது என்ற ஆறுதலை இந்தத் தீர்ப்பு நிச்சயமாக தரும் என்பதில் ஐயமில்லை.

உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள் பொதுவாக நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெற நீதிபதி கிருபாகரன் அவர்கள் அளித்துள்ள தீர்ப்பு பெரிதும் வழி வகுக்கும் என்ற வகையில் இந்தத் தீர்ப்பினை நான் முழு மனதோடு வரவேற்கிறேன். ஆனாலும் அ.தி.மு.க. அரசோ, மாநிலத் தேர்தல் ஆணையமோ இந்த நல்லத் தீர்ப்பை வரவேற்காமல், வழக்கம் போல் மேல் முறையீடு செய்தாலும் செய்யக் கூடும். என்ன செய்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close