[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

காவிரி விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து பேரணியாக சென்று பிரதமர் அலுவலகத்தில் அதிமுக எம்.பி.க்கள் மனு

cauvery-issue-aiadmk-mps-petition-rally-in-parliament-house

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என அதிமுக எம்.பி.க்கள் பிரதமர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்.பி.க்கள் பிரதமர் அலுவலகத்தில் அளித்த மனுவில், காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் வகையில், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவை அமைக்க முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருவதை சுட்டிக்காட்டியுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதையும், அதுதொடர்பாக மத்திய அரசுக்கு கடிதங்கள் எழுதப்பட்டதையும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நடப்பாண்டில்,சம்பா சாகுபடிக்கு கர்நாடகாவில் இருந்து நீர் திறக்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியதையும், உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு ‌காவிரி நீரை வழங்குமாறு கர்நாடகாவுக்கு பலமுறை உத்தரவிட்டும் கர்நாடக அரசு அதை செயல்படுத்தவில்லை என்பதையும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், கடந்த 30ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் காவிரி வழக்கு விசாரணைக்கு வந்தபோது தலைமை வழக்கறிஞர் முகுல் ரோகத்கி அக்டோபர் 4ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என கூறியதும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாரியம் அமைக்க முடியுமென 30ஆம் தேதி கூறிய மத்திய அரசு, திடீரென மேலாண்மை வாரியம் அமைக்க கூறும் உத்தரவை திருத்த‌க் கோரி 3ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக அதிமுக எம்.பி.க்கள் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நிலைப்பாடு தமிழ்நாட்டுக்கும் விவசாயிகளுக்கும், எதிரானது எனக் கூறியுள்ள அதிமுக எம்பிக்கள்,மத்திய அரசு நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், கர்நாடக அரசின் செயல்பாடுகளை ஆதரித்து தமிழகத்திற்கு அநீதி இழைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற மத்திய ‌நீர் வளத்துறை அமைச்சகத்துக்கு அறிவுறுத்த வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 30ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவை செயல்படுத்தும் வகையில் ‌காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து லட்சக்கணக்கான தமிழக விவசாயிகளுக்கு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும் என்றும் அதிமுக எம்பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close