[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி

உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசே மதிக்கவில்லை என்றால் மக்கள் எப்படி மதிப்பார்கள்? திருநாவுக்கரசர் கேள்வி

cauvery-water-row-tn-congress-leader-thirunavukkarasar-condemns-central-govt-decision

உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசே மதிக்கவில்லை என்றால் ‌‌நாட்டிலுள்ள மக்கள் எப்படி கட்டுப்படுவார்கள் என த‌மிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் கே‌ள்வி எழுப்பியுள்ளார். எனவே மத்திய அரசு, உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

முன்னதாக காவிரி விவகாரத்தில் நாளைக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக திருத்த மனுவை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. அதில் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது என்றும் அதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. மேலும் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட முடியாது என தெரிவித்துள்ள மத்திய அரசு, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை ஒரு பரிந்துரையாகவே தெரிவித்துள்ளதாகவும் கட்டாயம் என குறிப்பிடப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close