[X] Close
JUST IN
அரசியல் 06 Sep, 2016 05:08 PM

காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? கருணாநிதி கேள்வி

காவிரிப் பிரச்னையில் உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, தமிழக அரசு எடுக்கப்போகும் நிலைப்பாடு என்ன என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் அவர், காவிரியில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள 13 டிஎம்சி தண்ணீர் என்பது சாகுபடிக்கு போதவே போதாது என தெரிவித்துள்ளார்.

காவிரி கண்காணிப்புக் குழுவை அணுகுவதால் பயனில்லை கூறியுள்ள கருணாநிதி, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவை அமைத்திட மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் உத்தரவைப் பெற வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். இதற்காக விவசாயிகள் கேட்டுக் கொண்டபடி சீராய்வு மனுவை அரசு தாக்கல் செய்யுமா என்றும் குறைந்தபட்சம் 50 டிஎம்சி தண்ணீரைப் பெற தமிழக அரசு என்ன செய்யப் போகிறது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுமா அல்லது பிரதமரிடம் அனைத்துக் கட்சி குழுவை அழைத்துச் சென்று அரசியல் அழுத்தம் தரப்படுமா என்ற கேள்விக்கு தமிழக அரசின் பதில் என்ன என்றும் கருணாநிதி கேட்டிருக்கிறார்.

Advertisement:
Advertisement:
[X] Close