[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS சென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை
  • BREAKING-NEWS சென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்
  • BREAKING-NEWS சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது
  • BREAKING-NEWS சேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது
  • BREAKING-NEWS புதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்

டிடிவி தினகரன் அணி எம்எல்ஏக்களை இழுக்க ஈபிஎஸ்-ஓபிஎஸ் ரகசிய பேச்சுவார்த்தை

talks-between-eps-ops-and-ttv-camp-ahead-of-disqualification-judgment

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் எந்தநேரத்திலும் தீர்ப்பு வழங்கலாம். இதனிடையே, ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்பு டிடிவி தினகரன் தரப்பிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியிலிருந்து நீக்கக்கோரி டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததையடுத்து 18 எம்எல்ஏக்களை பேரவைத் தலைவர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தீர்ப்பு எந்த நேரத்திலும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிடும் பட்சத்தில் அது ஈபிஎஸ்- ஓபிஎஸ் தரப்புக்கு சாதகமாக இருக்காது. ஏனென்றால் சட்டப்பேரவையில் மெஜாரிட்டியை பெற குறைந்தபட்சம் 118 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும்.

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வென்ற தொகுதிகள் மொத்தமாக 136. இதில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதாவும் ஒருவர். தற்போது அவர் மறைவுக்கு பின் நடைபெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் டிடிவி தினகரன் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தவிர கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த மூன்று எம்எல்ஏக்களும் தற்போது டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளித்துள்ளனர். அப்படியானால் மொத்தமாக 22 பேர் முதலமைச்சர் பழனிசாமி தரப்புக்கு சாதகமாக சட்டப்பேரவையில் வாக்களிக்க வாய்ப்பில்லை. எனவே சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடைபெறும் பட்சத்தில் அது முதலமைச்சர் பழனிசாமிக்கு சாதமாக இருக்காது.

இந்நிலையில் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் எந்த நேரத்திலும் தீர்ப்பு வழங்கலாம். எனவே ஓபிஎஸ்- ஈபிஎஸ் தரப்பு டிடிவி தினகரன் தரப்பிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே அணிகள் இணைய வேண்டும் என்றால் டிடிவி தினகரன் சில நிபந்தனைகள் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது தற்போதைய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 6 அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் தனக்கு ஆதரவாக உள்ள ஒருவரை முதலமைச்சராக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை.  தற்போதைய முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், மற்றும் கே.சி.வீரமணி ஆகியோரைத்தான் அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என டிடிவி தினகரன் தரப்பில் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து முன்னாள் எம்.பியும், அதிமுகவின் செய்தித்தொடர்பாளருமான கே.சி.பழனிசாமி, “ சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருடன் இணைவது என்பது சாத்தியமில்லாத ஒன்று. ஆனால் நாங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். 18 எம்எல்ஏக்களும் மீண்டும் எங்களுடன் சேர்வார்கள் என்ற நம்பிக்கை அதிகளவில் உள்ளது. அவர்கள் மீண்டும் அதிமுகவின் எம்எல்ஏக்களாக தொடர்வார்கள். டிடிவி தினகரன் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. அவர் தனியாகக் கட்சி தொடங்க இருக்கிறார்” எனக் கூறியுள்ளார்.

இது குறித்து டிடிவி தினகரன் அணியை சேர்ந்த தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ ஒருவர், “ எங்களுடன் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணியை சேர்ந்த எம்எல்ஏக்கள் பேசி வருகின்றனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு மக்கள் கொடுத்த வெற்றியை பார்த்து வியப்படைகின்றனர். எனவே அவர்கள் எங்களுடன் இணைய விரும்புகின்றனர்” எனக் கூறினார். மேலும் பேசிய அவர், “ஓபிஎஸ் அணியை சார்ந்தவர்கள் எங்களை இழுக்க பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். நாங்கள் மீண்டும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் தமிழக மக்கள் எங்களை நம்ப மாட்டார்கள்” எனக் கூறினார். எனவே உயர்நீதிமன்றத்தில் வரவுள்ள தீர்ப்பால் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என கருதலாம்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close