[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சர்ச்சைக்குரிய ஓவர் த்ரோ ரன்கள் - மவுனம் கலைத்தது ஐசிசி
  • BREAKING-NEWS என்.எல்.சி ஊழியரை அடித்துக் கொன்ற மனைவி - விசாரணையில் அம்பலம்
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்
  • BREAKING-NEWS ‘சரவணபவன்’ ராஜகோபால் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS நடு ரோட்டில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக் கொலை - தகாத உறவு காரணமா?

காஷ்மீரில் பாகிஸ்தான் வன்முறைகளை தூண்டிவிடுகிறது: மெஹபூபா முஃப்தி குற்றச்சாட்டு

modi-mehbooba-meet

காஷ்மீரில் தொடரும் வன்முறை சம்பவங்களை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக பிரதமர் மோடியை அம்மாநில முதலமைச்சர் மெஹபூபா முஃப்தி சந்தித்து பேசினார். டெல்லியில் பிரதமர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

பிரதமரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மெஹபூபா, காஷ்மீரில் பாகிஸ்தான் வன்முறைகளை தூண்டிவிடுவதாக குற்றஞ்சாட்டினார். அப்பாவி இளைஞர்களை வன்முறையில் ஈடுபட தூண்டி விடுவதை பாகிஸ்தான் இனிமேலாவது நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவுடனான பிரச்னைகளுக்கு தீர்வு காண கிடைத்த பல நல்ல வாய்ப்புகளை பாகிஸ்தான் தவற விட்டுவிட்டதாகவும் மெஹபூபா தெரிவித்தார்.

காஷ்மீரில் பயங்கரவாதி புர்ஹான் வானி கொல்லப்பட்டதன் எதிரொலியாக கடந்த மாதம் 8-ம் தேதி தொடங்கிய வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. காஷ்மீரின் பல பகுதிகளில் 50-வது நாளாக ஊரடங்கு உத்தரவு இன்றும் நீடித்தது. இதற்கிடையில் புல்வாமாவில் இன்று காலை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவலர் ஒருவர் உயிரிழந்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close