[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ கபடி லீக் தொடரில், சென்னையில் நேற்று தமிழ் தலைவாஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது
  • BREAKING-NEWS முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் இன்று தொடக்கம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா: துலி அருகே நிம்குல் கிராமத்தில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதல் - 10பேர் பலி
  • BREAKING-NEWS இன்று முதல் அமலுக்கு வந்தது ஆவின் பாலின் புதிய விலை

ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கு: விரைவான விசாரணைக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்

aircel-maxis-case-court-advice-to-speed-investigation

ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் விரைவாக விசாரணை நடத்த, சி.பி.ஐ.க்கு, டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கலாநிதி மாறன், தயாநிதி மாறன், காவிரி கலாநிதி உள்ளிடோர் ஆஜராகினர். அப்போது, வழக்கில் கால அவகாசம் கேட்பதை தவிர்த்து விரைந்து விசாரணை நடத்தி முடிக்க சி.பி.ஐ.க்கு, நீதிபதி ஒ.பி.சைனி அறிவுறுத்தினார்.

வழக்கின் பின்னணி

2004-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதிமாறன் ஏர்செல் நிறுவன பங்குகளை மலேசிய தொழில் அதிபர் அனந்தகிருஷ்ணனின் மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்க நெருக்கடி கொடுத்ததாக புகார் எழுந்தது.

இந்த வழக்கில் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 29-ம் தேதி சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. மேக்சிஸ் நிறுவனத்தின் அனந்தகிருஷ்ணனுடன் தயாநிதி மாறன் கூட்டுச்சதியில் ஈடுபட்டு, ஏர்செல் பங்குகளை விற்குமாறு அதன் உரிமையாளர் சிவசங்கரனை நிர்பந்தித்தார் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதற்குக் கைமாறாக மாறன் சகோதரர்களுக்குச் சொந்தமான சன் நெட்வொர்க்கில் மேக்சிஸ் நிறுவனம் 742 கோடியே 58 லட்சம் ரூபாய் அளவிற்கு முதலீடு செய்தது என்றும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டிருந்தது. மாறன் சகோதரர்களுடன், கலாநிதி மாறனின்‌ மனைவி காவேரி கலாநிதியின் பெயரும் அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close