[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

தமிழக அரசு மனு அவசர வழக்காக ஏற்பு: காவிரி வழக்கு செப்.2-ல்‌ விசாரணை

cauvery-water-issue-tn-petition-accepted-by-supreme-court

தமிழகத்துக்கு காவிரியில் 50 டி.எம்.சி தண்ணீர் திறக்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் 2-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூரிடம் தமிழக அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று,‌ அவசர வழக்காக விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் காவிரியில் திறந்துவிட வேண்டிய 50 டி.எம்.சி நீரை வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி கடந்த திங்கள்கிழமை தமிழக அரசு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

இதனிடையே, காவிரியில் கடந்த 2012, 2013-ஆம் ஆண்டுகளில் நீரை திறந்துவிடாததால் ஏற்பட்ட இழப்புக்கு கர்நாடகாவிடம் 2,485 கோடி ரூபாய் கேட்டு தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களை 2 வாரத்திற்குள் தமிழக, கர்நாடக அரசுகள் தாக்கல் செய்ய நீதிபதி கோபால் கவுடா, எஸ்.கே.கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close