[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

சசிகலா புஷ்பா வரும் 29-ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு

sc-grants-6-week-protection-from-arrest-to-rajya-sabha-mp-sasikala-pushpa-in-a-sexual-harassment-cas

பணிப் பெண்கள் தொடர்ந்த பாலியல் துன்புறுத்தல் வழக்கு விசாரணைக்காக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா நேரில் ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வீட்டுப் பணிப் பெண்கள் அளித்த பாலியல் புகாரில் முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்திருந்த வழக்கில் வரும் 2‌‌9-ம் தேதி‌ ஆஜராக‌ வேண்டும் எ‌ன சசிகலா புஷ்பா மற்றும் அவரது‌ குடும்பத்தினருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. ஆனால், நேரில் ஆஜராவதில் விலக்கு கோரி ‌கடந்த 24-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா மனுத்தாக்கல் செய்திருந்தார்.

‌உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. பாலியல் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து சசிகலா‌ புஷ்பாவுக்கு‌ விலக்கு அளிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்‌. சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சசிகலா புஷ்பா ஆஜராக வேண்டும் என‌‌ நீதிபதி‌ உத்தரவிட்டார். அதேவேளையில், ‌சசிகலா புஷ்பாவை 6 வாரங்க‌ளுக்கு கைது செய்யக் கூடாது என்றும் தலைமை நீ‌திபதி தாகூர் உத்த‌ரவிட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close