[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி
  • BREAKING-NEWS தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம்
  • BREAKING-NEWS சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி

ரயில் பயணிகளுக்கு காப்பீடு வசதி: 31-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது

railway-passengers-to-get-rs-10-lakh-insurance

ரயில் பயணிகளுக்கு காப்பீடு திட்டம் வருகிற 31-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, இணைய தள வழியாக ரயில் பயண முன்பதிவு செய்யும்போது பயணிகளின் பாதுகாப்புக்கென 92 காசுகள் காப்பீட்டுப் பிரீமியமாக வசூலிக்கப்படும்.

விபத்து, தீவிரவாத தாக்குதல், கொள்ளை, வன்முறை, துப்பாக்கிச் சூடு, தீ விபத்து போன்ற அசம்பாவித சம்பவங்களின்போது உயிரிழந்தாலோ, நிரந்தர செயலிழப்பு ஏற்பட்டாலோ பயணியின் குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் வரை இழப்பீடு வழங்க இந்த காப்பீடு வகை செய்கிறது.

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், வெளிநாட்டுப் பயணிகள் ஆகியோருக்கு இந்தக் காப்பீடு பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close