[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா ஹிமாச்சல பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமனம் . ஹிமாச்சல் ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரட் குஜராத் ஆளுநராக பணியிடமாற்றம்
  • BREAKING-NEWS ‘பெருங்களத்தூர் டூ சிங்கப்பெருமாள் கோவில்- 8 வழிச்சாலை’ : முதல்வர் அறிவிப்பு
  • BREAKING-NEWS தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது

பாகிஸ்தானைப் புகழ்ந்த நடிகை ரம்யா மீது தேசத் துரோக வழக்கு

actor-politician-ramya-accused-of-sedition-for-pakistan-not-hell-comment

பாகிஸ்தான் நரகமல்ல, அது சிறந்த நாடு எனக் கூறியதற்காக கன்னடத் திரைப்பட நடிகையும் அரசியல்வாதியுமான ரம்யா மீது தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மடிக்கேரி பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் கொடகு நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இவ்வழக்கு வரும் 27-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. பாகிஸ்தானுக்கு‌ செல்வது நரகத்திற்கு செல்வது போன்‌றது என ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதில் அளித்து பே‌சிய காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் எம்.பி ரம்யா, பாகிஸ்தான் நரக‌மல்ல.என்றும் அதுவும் நம்மைப் போன்ற ஒரு‌நாடுதான் என்றும் குறிப்பிட்டிருந்தார். ரம்யாவின் கருத்துக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியினர் சில இடங்களில் போராட்டங்கள் நடத்தினர். பாகிஸ்தானை புகழ்ந்து சர்ச்சையில் சிக்கியுள்ள ரம்யா, குத்து, கிரி, வாரணம் ஆயிரம், பொல்லாதவன் உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து 2013-ம் ஆண்டு மாண்டியா தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்வானார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close