[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

கொடியேற்றி சில மணி நேரத்தில் உயிரிழந்த வீரர்: காஷ்மீரில் உருக்கமான நிகழ்வு

this-crpf-officer-had-unfurled-tricolour-an-hour-before-he-died-fighting-terrorists-in-kashmir

காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். அவர் உயிரிழப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன் தேசியக் கொடி ஏற்றிய உருக்கமான படக் காட்சி வெளியாகியுள்ளது.

காஷ்மீரில் நடைபெற்ற சுதந்தர தின கொண்டாட்டங்களின் போது நவ்ஹாட்டா என்ற பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் அதிகாரி பிரமோத் குமார் தேசியக் கொடியை ஏற்றினார். அப்போது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்துவதாக வந்த தகவலையடுத்து அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று பதிலடி நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அந்த மோதலில் பயங்கரவாதி ஒருவரின் துப்பாக்கியிலிருந்து பாய்ந்த குண்டு தாக்கி பிரமோத் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து சொந்த மாநிலமான ஜார்க்கண்ட்டுக்கு பிரமோத்தின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஆயிரக்கணக்கானோர் பிரமோத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பிரமோத்தின் மகன் சல்யூட் அடித்து தனது தந்தைக்கு அஞ்சலி செலுத்தியது உருக்கமாக இருந்தது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close