JUST IN
  • BREAKING-NEWS போரூர் மேம்பாலத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்
  • BREAKING-NEWS ரம்ஜான் திருநாளையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி வாழ்த்து
  • BREAKING-NEWS சேலம்: ஓமலூர் பகுதியில் சட்டவிரோதமாக புதர்களில் மறைத்து மதுபாட்டில்கள் விற்றதாக 11 பேர் கைது
  • BREAKING-NEWS இலங்கையின் தலைமன்னரில் 2 பேரிடம் இருந்து 135 கிலோ கஞ்சா பறிமுதல்
  • BREAKING-NEWS கடலூரில் காவல்துறை மேற்கொண்ட சோதனையில் 96 ரவுடிகள் கைது
  • BREAKING-NEWS ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான அடுத்தகட்ட போராட்டம் குறித்து இன்று மதியம் ஆலோசனை
  • BREAKING-NEWS மேட்டூர் அணை நீர்வரத்து விநாடிக்கு 176 கன அடியில் இருந்து 153 கன அடியாக குறைந்தது
  • BREAKING-NEWS உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS மதுரையில் ஜாக் அமைப்பினர் இன்று ரம்ஜான் கொண்டாடுகின்றனர்
  • BREAKING-NEWS ஆரணி அருகே பாத்திரக்கடை உரிமையாளர் வீட்டில் 36 சவரன் நகை கொள்ளை
  • BREAKING-NEWS திருப்பதி கோவிலில் நேற்று உண்டியலில் வசூலான தொகை ரூ.2.77 கோடி: தேவஸ்தான நிர்வாகம்
  • BREAKING-NEWS தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு
  • BREAKING-NEWS அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி
  • BREAKING-NEWS மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி
இந்தியா 15 Aug, 2016 05:14 PM

பிரதமர் மோடி பேச்சு குறித்து ஆம் ஆத்மி விமர்சனம்

சலிப்பு ஏற்படுத்தும் வகையில் பேசுபவர்களுக்கு ஒலிம்பிக்கில் பதக்கம் வழங்கினால், பிரதமர் நரேந்திர மோடிக்குத் தான் தங்கம் கிடைக்கும் என ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் சாடியுள்ளனர்.

மோடியின் சுதந்திர தினப் பேச்சு தொடர்பாக டெல்லி கலாசாரத்துறை அமைச்சர் கபில் மிஸ்ரா இவ்வாறு கூறியிருக்கிறார். மோடி பேசிக்கொண்டிருக்கும் போது, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியும், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கண்களை மூடிக் கொண்டிருக்கும் காட்சிகள் கேமராக்‌களில் சிக்கியிருப்பதாகவும், இது பிரதமரின் உரை, சலிப்புத் தட்டும் வகையில் இருப்பதை உணர்த்துவதாகவும் துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா விமர்சனம் செய்துள்ளார்.

மோடியின் பேச்சு ஆ‌ழ்ந்த முனைப்புக் கொண்டதாகவோ அல்லது கொள்கை சார்ந்ததாகவோ இல்லை என்றும் சிசோடியோ குற்றம்சாட்டியிருக்கிறார். காஷ்மீர் விவகாரம், க‌ருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவருவதாகக் கூறியது, பசு பாதுகாப்பு என்ற பெயரில் அரங்கேறும் தாக்குதல்கள், தலித்துகள் மீதான தாக்குதல்கள் ஆகிய பிரச்னைகளில் மோடியின் அரசு சிக்கித் திணறுவதாகவும் மனிஷ் சிசோடியா சாடினார்

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads