[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS பி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு
  • BREAKING-NEWS சென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

ஜம்மு காஷ்மீர் விவகாரம்...தேச‌த்தின்‌ பாதுகாப்பில் சமரசம் கிடையாது பிரதமர் மோடி

there-is-no-compromise-on-national-security-modi

நாட்டின் பாதுகாப்பில் ஒரு போதும் சமரசம் செய்ய முடியாது என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து பேசுகையில் அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

கடந்த ஜூலை 8ஆம் தேதி ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த புர்கான் வானி பாதுகாப்பு ‌படையினரால் கொல்லப்பட்டதை தொடர்ந்து காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் காஷ்மீர் விவகாரம்தொடர்பாக டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. 4 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில்,பிரதமர் மோடி பேசினார்.

எல்லை தாண்டும் தீவிரவாதத்திற்கு பாகிஸ்தான் ஆதரவளிப்பதே காஷ்மீரின் தற்போதைய நிலைக்கு காரணம் என குற்றம்சாட்டிய அவர், பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரும் ஜம்மு காஷ்மீருக்கு சொந்தமானதே என கூறினார்.

தேசத்தின் பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ள மோடி, ஜம்மு காஷ்மீரில் அனைத்து தரப்பு மக்களின் பிரச்னைகளுக்கும் அரசியலமைப்பின் அடிப்படையில் தீர்வு காண தயார் என தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close