[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்
  • BREAKING-NEWS அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன?
  • BREAKING-NEWS சிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

16 ஆண்டு கால உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று முடிக்கிறார் ஐரோம் ஷர்மிளா

irom-sharmila-to-end-her-fast-after-16-years-today

மணிப்பூர் மாநில சமூக போராளியான ஐரோம் ஷர்மிளா இன்றுடன் தனது 16 ஆண்டு கால உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்கிறார்.

ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்திற்கு எதிரான போராட்டகளத்தை மாற்றத் திட்டமிட்டு அவர் இம்முடிவை எடுத்துள்ளார். போராட்டத்தின் அடுத்தகட்டமாக, மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட அவர் திட்டமிட்டுள்ளார். நீண்ட போராட்டத்திற்கு அரசுத் தரப்பிடமிருந்து சாதகமான பதில் வராததை அடுத்து இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி 2,000-ஆவது ஆண்டிலிருந்து ஷர்மிளா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு உணவுப் பொருட்கள் மூக்கு வழியாக செலுத்தப்பட்டு வருகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close