[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தை சகாரா பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி தரும் முடிவை பாஜக கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ரூ.6 கோடி சொத்து வரி பாக்கி செலுத்தாததால் மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு பேரூராட்சி நிர்வாகம் ஜப்தி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போன வழக்கில் சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது - சென்னை உயர்நீதிமன்றம்

கெஜ்ரிவால் அரசுக்கு பின்னடைவு... டெல்லியின் நிர்வாக அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கே..... நீதிமன்றம் தீர்ப்பு

arvind-kejriwal-vs-l-g-najeeb-jung-key-highlights-of-the-delhi-hc-order

கெஜ்ரிவால் அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக, டெல்லியின் நிர்வாக அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கே உள்ளது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், டெல்லி அமைச்சரவையின் அறிவுறுத்தலின் பேரிலேயே துணைநிலை ஆளுநர் செயல்பட வேண்டும் என்ற கெஜ்ரிவால் அரசின் கோரிக்கையை நிராகரித்தது. துணைநிலை ஆளுநருக்கு தெரிவிக்காமல் டெல்லி அமைச்சரவை எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாது என்று கூறியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிராக ஊழல் தடுப்பு ஆணையம் நடவடிக்கை எடுக்க முடியாது என்ற மத்திய அரசின் அறிவிக்கையும் சட்ட விரோதம் கிடையாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதேபோல், துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் வெளியிடப்பட்ட கெஜ்ரிவாலின் பல்வேறு அறிக்கைகள் சட்டவிரோதம் எனக் கூறி அவற்றை ரத்து செய்துள்ளது. டெல்லி அரசின் நிர்வாகத் தலைவர் யார் என்பது குறித்து துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கிற்கும் முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கும் இடையே மோதல் நடைபெற்று வரும் நிலையில் இந்தத் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக கெஜ்ரிவால் அரசு கூறியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close