[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வெற்றி
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா, ஹரியானா - பாஜக தொடர்ந்து முன்னிலை
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

‌அமீர்கான் பெயரை குறிப்பிட்டு பேசவில்லை : மனோகர் பரிக்கர் விளக்கம்

backlash-after-defence-minister-talks-of-lesson-to-aamir-khan-and-snapdeal

தேசத்திற்கு எதிராக பேசுபவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று கூறியது தொடர்பாக பாதுகாப்பு‌த்துறை அமைச்சர் மனோகர் பரிக்கர் விளக்கம் அளித்துள்ளார். ‌நடிகர் அமீர்கானை விமர்சித்ததாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அவரது பெயரைக் குறிப்பிட்டு தாம் பேசவில்லை என பரிக்கர் தெரிவித்துள்ளார். முன்னதாக, புனே நகரில் நிகழ்ச்சியொன்றில் பேசிய மனோகர் பரிக்கர், நாட்டை விட்டு வெளியேறுவேன் என கூறிய நடிகரின் பேச்சு, திமிரானது என மறைமுகமாக சாடியிருந்தார்.

மேலும், அந்த நடிகரை மக்கள் புறக்கணித்ததாக குறிப்பிட்ட பரிக்கர், தேசத்திற்கு எதிரானவர்களுக்கு பாடம் புகட்டப்பட வேண்டும் என கூறியிருந்தார். இதற்கு காங்கிரஸ‌ கட்சி கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. நடிகர் அமீர்கான் இந்தியாவில் சகிப்பின்மை அதிகரித்து விட்டதாக கடந்த ஆண்டு கூறியிருந்தார். குடும்பத்துடன் வெளிநாட்டில் குடியேறிவிடலாம் என்று தனது மனைவி குறிப்பிட்டதாகவும் அமீர்கான் தெரிவித்திருந்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close