[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

நொய்டாவில் தாயையும் மகளையும் பாலியல் வன்கொடுமை செய்த கொள்ளைக்கும்பல்

noida-women-daughter-gang-rape

டெல்லி அருகே காரை வழிமறுத்த கொள்ளையர்கள் அதில் இருந்த 14 வயது சிறுமியையும் அவளது தாயையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் .

நொய்டாவில் இருந்து ஒரு குடும்பம் உத்தரபிரதேசம் ஷாஜகான்பூருக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு காரில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.அப்போது காரின் கண்ணாடியில் ஏதோ அழுகிய பொருள் விழுந்துள்ளது .இதனால் காரை இரவில் இயக்க சிரமமாக இருந்ததால் காரை நிறுத்தியுள்ளனர்.

அவ்வேளையில் ஒரு கொள்ளை கும்பல் அவர்களை சுற்றி வளைத்தது . அவர்கள் அணிந்திருந்த நகைகள் அவர்களிடம் இருந்த செல்போன் ,பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.மேலும் காரில் இருந்த 14 வயது சிறுமி மற்றும் அவளது தாயை காரில் இருந்து வெளியில் இழுத்து போட்ட அந்த கும்பல் அவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் .

அந்த காரில் பயணம் செய்த ஆண்களை தாக்கி அவர்களை கயிற்றில் கட்டி போட்டுள்ளனர்.இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close