[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.
  • BREAKING-NEWS தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் ரோகித் சர்மா அசத்தல் சதம். போதிய வெளிச்சமின்மை காரணமாக முன்கூட்டியே முடிவுக்கு வந்தது முதல்நாள் ஆட்டம்
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் நடைபெறும் மூன்று தொகுதிகளிலும் பரப்புரை ஓய்ந்தது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

திருப்பதியில் பக்தர்கள் அறையில் புகுந்து மிரட்டிய சிறுத்தை

cheetah-enters-in-tirupathi-devotees-room

திருப்பதி திருமலையில் பத்மாவதி ந‌கரில் முக்கிய பிரமுகர்கள் தங்கும் ஓய்வு விடுதியில் இரவு நேரத்தில் சிறுத்தை புகுந்ததால் பக்தர்கள் அச்சமடைந்தனர். இதனை அடுத்து சிறுத்தையப் பிடிக்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்ட‌து.

திருப்பதி திருமலை முக்கிய பிரமுகர்கள் தங்கும் விடுதி.உறங்குப்போகும் நேரத்தில் நுழைந்தது தூக்கத்தை கலைத்தது சிறுத்தை.திருமலையில் உள்ள நரசிங் சதன் பக்தர்கள் ஓய்வு அறையில் இரவு 9,15 மணிக்கு புகுந்தது சிறுத்தை. உடனடியாக அறைகளில் தங்கியிருந்த அனைத்து பக்தர்களுக்கும் கதவு ஜன்னல்களை அடைத்துவிட்டு‌ உள்ளேயே இருக்குமாறு தொலைபேசி மூலம் எச்சரி‌க்கைவிடுக்கப்பட்டது.தேவஸ்தான வனத்துறையினர்,தீயணைப்பு படையினர், போலீசார் மற்றும் கால்நடை மருத்துவர்கள் ஒன்றிணைந்து சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால்‌ ஓன்றாவது தளத்தில் இருந்‌த ஜன்னல் வழியே சிறுத்தை தப்பிச் சென்றது.
3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுத்தை வெளியே சென்றது ‌உறுதிபடுத்தப்பட்டதால் பக்தர்கள் நிம்மதி அடைந்தனர். வனப்பகுதியையொட்டி பக்கதர்கள் ஓய்வு அறை உள்ளதால் சிறுத்தைகள் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அதிகாரிகள் கூறினார். இனி இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுக்கப்படும் என்றும் தடுப்பு வேலிகள் அமைக்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close