[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

ஓரினச் சேர்க்கை சட்டவிரோதம் என்ற தீர்ப்பு எதிரான மறு சீராய்வு மனு பிப் 2 விசாரணைக்கு வரும்: உச்சநீதிமன்றம்

india-s-supreme-court-to-revisit-homosexuality-ruling-on-2-nd-of-feb

ஓரினச் சேர்க்கை சட்டவிரோதம் என்ற தீர்ப்பு எதிரான மறு சீராய்வு மனு வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.இந்திய தண்டனைச் சட்டத்தின் 377-வது பிரிவு ‘இயற்கைக்கு மாறான பாலுறவு’ கொள்வதை தண்டனைக்குரிய குற்றமாக்குகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு இச்சட்டம் குறித்து விசாரணை நடத்திய டெல்லி உயர் நீதிமன்றம், ஒப்புதலோடு உடலுறவு கொள்ளும் 18 வயதுக்கும் அதிகமானவர்களுக்குப் பொருந்தாது என்று அறிவித்தது.


மேலும். இது அரசியல் சாசனத்துக்கு முரணானது என்றும் அறிவித்தது.

டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம், 377-வது பிரிவை திருத்துவது குறித்து மாற்றம் செய்வது குறித்தோ அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என 2013ல் தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்புக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் முரண்பாடான கருத்துக்கள் நிலவி வந்தன.

ஓரினச் சேர்க்கை குறித்த தீர்ப்பு: மறுபரிசீலனை செய்ய அருண் ஜெட்லி கோரிக்கை
ஓர் பாலினச் சேர்க்கைக்கு எதிராக கடந்தாண்டு வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கேட்டுக் கொண்டுள்ளார்.

ஓர் பாலினச் சேர்க்கையில் பல லட்சம் பேர் ஈடுபடும் நிலையில் அவர்களை புறம் தள்ளிவிட முடியாது என்றும் ஜெட்லி குறிப்பிட்டார். இந்திய நீதிமன்றங்கள் எப்போதுமே கருத்துரிமை மற்றும் செயல்பாட்டு சுதந்தரத்துக்கு ஆதரவாகவே இருந்து வந்துள்ளதாகவும் இவ்விஷயத்தில் ஐரோப்பிய நீதிமன்றங்களுக்கு இணையான முற்போக்கு மனப்பாங்கை இந்திய நீதிமன்றங்கள் பெற்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால் ஓர் பாலினச் சேர்க்கை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பிற்போக்குத் தனமாக இருப்பதாக கருதுவதாகவும் ஜெட்லி தெரிவித்தார். இந்திய ஜனநாயகத்தை கட்டமைத்த 5 முக்கிய வழக்குகள் என்ற தலைப்பில் டெல்லியில் நடந்த கருத்தரங்கில் ஜெட்லி இவ்வாறு பேசினார்.ஓரினச்சேர்க்கை சட்டத்தில் திருத்தம் கோரி 18 /12/2015 இல் சசிதரூர் கொண்டு வந்த தனிநபர் மசோதா தோல்வி


இந்நிலையில் 377-வது பிரிவில் திருத்தம் செய்ய வலியுறுத்தி திருவனந்தபுரம் மக்களவை உறுப்பினர் சசி தரூர் கடந்த டிசம்பர் 2015 இல், தனிநபர் மசோதா கொண்டு வந்தார்.அதில் ஓரினச்சேர்க்கையை தண்டனைக்குரிய சட்டத்திலிருந்து நீக்கவேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு பாஜக உறுப்பினர் நிஷிகந்த் துபே எதிர்ப்பு தெரிவித்தார். புராணங்கள், இதிகாசங்களை மேற்கோள்காட்டி நான் எதிர்க்கவில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பைதான் சுட்டி காட்டுகிறேன் என்றார்.இதற்கு பதிலளித்த தரூர், துபே உச்ச நீதிமன்ற தீர்ப்பின் ஒரு பகுதியைத்தான் சுட்டிக் காட்டுகிறார் என்றார்.நிலைமை பெரிய விவகாரமாக மாறிய நிலையில், தலைவர் இருக்கையில் இருந்த துணைத் தலைவர் தம்பித்துரை, மசோதாவை வாக்கெடுப்புக்கு அனுப்பினார். மசோதாவுக்கு எதிராக 71 வாக்குகளும், ஆதரவாக 24 வாக்குகளும் கிடைத்தன.


ஒருவர் வாக்களிக்கவில்லை. இதையடுத்து தரூரின் மசோதா அறிமுக நிலையிலேயே தோற்கடிக்கப்பட்டது.மசோதாவை பாராளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்தது பற்றி கருத்து தெரிவித்த சசிதரூர், உறுப்பினர்களின் சபிப்பின்மை என்னை ஆச்சிரியப்பட வைக்கிறது என தெரிவித்தார்இந்நிலையில்,உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஓரினச் சேர்க்கை ஆதரவாளர்களால் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு மீதான விசாரணை வரும் பிப்.2 ஆம் தேதி எடுத்துக் கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close