சபரிமலை விரத ஆடையை பள்ளிக்கு அணிந்து சென்ற தெலங்கானா மாணவரை ஆசிரியை அனுமதிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
யாதாதிரி போன்கிரி மாவட்டத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்திருந்தார். விரதம் இருப்பதால் அதற்குரிய ஆடையில் பள்ளிக்கு சென்ற அந்த மாணவரை ஆசிரியை உள்ளே அனுமதிக்காததுடன், மாணவரையும் அவரது தந்தையையும் பள்ளிக்கு அழைத்து கண்டித்ததாகத் தெரிகிறது.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரவிய நிலையில் மாணவனுக்கு ஆதரவாக கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். 16 நாட்கள் நடந்த போராட்டத்துக்குப் பின்னர் காவல்துறையினர் தலையிட்டதையடுத்து மாணவர் பள்ளிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார்.
அசாம் மக்கள் ஏன் இப்படி கொந்தளிக்கிறார்கள்? - வரலாற்று காரணம் இதுதான்..!
‘சென்னை ஹோட்டல் ஊழியரை கண்டுபிடிக்க உதவுங்கள்’- தமிழில் வேண்டுகோள் விடுத்த சச்சின்
பாலியல் குற்றங்களுக்கு சினிமாவில் பெண்களை சித்தரிக்கும் விதமும் காரணமே - கனிமொழி
டி20 உலகக் கோப்பையில் தோனி களமிறங்குவார் - பிராவோ நம்பிக்கை
“கலப்பட டீ தூள், காலாவதியான குளிர்பானங்கள்” - திடீர் சோதனையில் சிக்கிய உணவுப் பொருட்கள்