[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

பள்ளிக் குழந்தைகளின் மதிய உணவில் இறந்து கிடந்த எலி

dead-rat-found-in-midday-meal-in-up-8-students-and-teacher-fall-ill

பள்ளி குழந்தைகளுக்கு அளிக்கப்பட்ட மதிய உணவில் எலி ஒன்று இறந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர் நகரில் பள்ளி ஒன்றில் இன்று மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த மதிய உணவில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட பருப்பில் எலி ஒன்று இறந்து கிடந்துள்ளது. இதனைக் கண்ட பள்ளி ஆசிரியர் குழந்தைகளுக்கு உணவு அளிக்கப்படுவதை நிறுத்தியுள்ளார். எனினும் அதற்குள் இந்த உணவை சாப்பிட்ட 8 குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியர்  வாந்தி எடுத்து உடல் நலம் சரியில்லாமல் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து இவர்கள் அனைவரையும் பள்ளி ஆசிரியர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். இவர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று குணமடைந்து மீண்டும் வீடு திரும்பினர். இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணைக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் இந்த உணவை தயாரித்த தனியார் தொண்டு நிறுவனத்திடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதிக குழப்பங்கள் மற்றும் பிரச்னைகள் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close